பக்கம்:கட்டுரை வளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. தமிழ் இசையின் தொன்மையும் வளர்ச்சியும்

‘தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்நிலை வாணர்களும் - இவள்

என்று பிறந்தவள் என்றுண ராத

இயல்பினளாம் எங்கள் தாய்”

என்று கவியரசர் பாரதியார் தமிழ்மொழியின் பழமை யினைச் சிறப்புறப் பாராட்டினார். இத்தகு பழமையும் பெருமையும் உடைய தமிழ் முப்பிரிவாகப் பகுக்கப்பெற்று இயல், இசை, நாடகம் என்ற பெயருடன் வழங்கப்பெறு கின்றது. எனவே,தமிழ் ‘முத்தமிழ் என்றும் முழங்கப்படுவ தாயிற்று. இம் முத்தமிழும் ஒன்றனோடு ஒன்று இயை புடையன; தமக்கென இலக்கிய இலக்கணச் செல்வங் களைக் கொண்டன. மூன்றனுக்கும் பொதுவாக அமையும் சில இலக்கணங்களும் உண்டு. இவற்றினை மும்மைத் தமிழ், முத்தமிழ் என அறிவிற் சிறந்த நம் ஆன்றோர் வழங்கினர். சான்றாக, சிலப்பதிகாரத்தின் நூற்சிறப்புப் பாயிரத்தில், ‘குடக்கோ முனி சேரன் தண்டாவுரை முத்தமிழ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒருந் தமிழொரு மூன்று முலகின் புறவகுத்துச் சேரன் தெரித்த சிலப்பதிகாரம்’ என்றும் பேசப்படுவது கொண்டு, முத்தமிழ் என்ற வழக்குண்மை உணரலாம்.

சிலப்பதிகாரம் மூன்று தமிழும் விரவி வரும் நாடகக் காப்பியமாதலின், முத்தமிழ்க்காப்பியமென்று கூறப்படும். சிலப்பதிக்காரமும் அதற்கு உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் எழுதிய உரையுமே கொண்டு, நாம் அக்கால முத் தமிழ்ப்போக்கினை ஒருவாறு அறிய இயல்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/73&oldid=1374838" இலிருந்து மீள்விக்கப்பட்டது