பக்கம்:கட்டுரை வளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 கட்டுரை வளம்

களரிவியாவிரையுமென இத் தொடக்கத்தன’ என்றும், கடைச் சங்கத்தைக் குறிக்குமிடத்தில், ‘அவர்களாற் (கடைச்சங்கப் புலவர்களால்) பாடப்பட்டன. நெடுந் தொகை நானுாறும், குறுந்தொகை நானுாறும், நற் றிணை நானுாறும், ‘புறநானுாறும், ஐங்குறுநூறும்,’ ‘பதிற்றுப் பத்தும், “நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையு மென இத் தொடக்கத்தன’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இக் குறிப்பினாலும் தமிழிசையின் பழமை தெற்றெனத் துலக்கமுறும்.

‘பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், ‘பஞ்ச மரபு’, ‘தாளசமுத்திரம்’, சச்சபுடவெண்பா’, ‘இந்திர காளியம்’, ‘இசை நுணுக்கம்’, ‘பதினாறுபடலம்’, ‘தாள வகையோத்து, இசைத் தமிழ்ச் செய்யுட்டுறைக்கோவை’ முதலிய எண்ணற்ற இசைத்தமிழ் நூல்கள் பழங்காலத் தில் வழக்கிலிருந்து பின்னர் வழக்கு வீழ்ந்துபட்டிருக்கும் என்பர்.

நமக்கு இன்று கிடைக்கும் இசை பற்றிய குறிப்புகளுள் மிகப் பழமையானவை, எட்டுத்தொகையில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் காணப்படும் அரிய இசைக் குறிப்புகளாகும். பரிபாடல் கி. பி. முதல் நூற்றாண்டி னைச் சேர்ந்த நூலாகும். எழுபது பரிபாடலில் இன்று நமக்குக் கிடைப்பன இருபத்திரண்டேயாகும். ஒவ்வொரு பரிபாடலின் கீழும் அப்பாடலைப் பாடிய புலவர் பெயர், இசை அமைத்தவர் பெயர். யாழ், செந்துறை, வண்ணம், தூக்குமுதலியன குறிப்பிடப்பட்டுள்ளன. இக்குறிப்புகளை நோககினால் வளமார்ந்த தமிழிசையின் பழமையினையும் சிறப்பினையும் அறிவதோடு பாடலில் அமைந்த விழுமிய பொருளுணர்ச்சியினையும் சுவைத்து இன்புறலாம்.

தமிழில் ஆற்றுப்படை நூல்கள் இசைபற்றிய குறிப்புகள் பலவற்றைத் தந்திருக்கின்றன. 'இசைக்குக் காட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/76&oldid=1374853" இலிருந்து மீள்விக்கப்பட்டது