பக்கம்:கட்டுரை வளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இசையின் தொன் மையும் வளர்ச்சியும் 75

விலங்குகளும் கட்டுப்பட்டு நிற்கும் என்பதனைப் பின் வரும் பாட்டால் அறியலாம் :

ஒலியல் வார்மயிர் உயிரினள் கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையிலும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென மறம்புகல் மழகளிறு உறங்கும் நாடன்’

-அகநானூறு 102 : 5-9

"ஒரு குறமகள் குறிஞ்சி நிலத்திற்குரிய குறிஞ்சிப் பண்ணைத் திறமுறப் பாடத் தினைக்கதிரையுண்ண வந்த ஒரு யானை அதனை உண்ணாமலும், அவ்விடத்தை விட்டுப் புடைபெயராலும் அப்பண்ணால் நெஞ்சம் ஈர்க்கப்பட்டு மனமுருகி நின்று உறங்கியது என்பதனை இப்பாடற்பகுதியினால் அறிகின்றோம். மேலும் 'மதுரைக் காஞ்சி’ யில் யாழோர் மருதம் பண்ண என வரும் தொடரினையும், கலித்தொகையில் ‘செவ்வழி யாழிசை நிற்ப............மாலையும் வந்தன்று என வரும் தொட ரினையும் நோக்குமிடத்துச் சங்க காலத்து இசையினை உணர இயல்கின்றது.

தமிழ்ப்பண்கள் நூற்று மூன்று என்று கொள்ளப்படும், “பண்களாவன, பாலை யாழ் முதலிய நூற்று மூன்று’ என்பர் பரிமேலழகர். பிங்கலந்தை நிகண்டு ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும் எனக் குறிப்பிடுகின்றது. பெரும்பண்களாவன பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்பனவாம். இந்நாற்பெரும்பண்களுக்கும் மொத்தம் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் பாலை யாழ்த்திறம் ஐந்தாகவும், குறிஞ்சி யாழ்த்திறம் எட்டாகவும், மருத யாழ்த்திறம் நான்காகவும், செவ்வழி யாழ்த்திறம் நான்காகவும் கொள்ளப்படும். ஏழுசுரங்கள் எனப்படுவன குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/77&oldid=1376024" இலிருந்து மீள்விக்கப்பட்டது