பக்கம்:கட்டுரை வளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இசையின் தொன்மையும் வளர்க்சியும் 77

இன்னிசையுடன் பாடிப் பரவினர். எண்ணற்ற தேவாரப் பதிகங்களை அருளிச் செய்தனர். இசையாதரித்துக் கற்று வல்லார் சொல்லக் கேட்டு உகந்தவர்தம்’ என்று பாடு

கிறார் ஞானத்தின் திருவுருவாம் சம்பந்தர் திருநாவுக் கரசரோ,

‘சலம்பூவொடு துன்பம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

கலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்

உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்”

-நான்காம் திருமுறை : 16

என்று பாடுகிறார். ஏழிசையாய் இசைப்பயனாய், இன்ன முதாய், என் தோழனுமாய்’ என்றபடி இறைவனை இசை வடிவமாகவே கண்டு போற்றியவர் நம்பியாரூரர். இவ்வாறு இவர்கள் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கிப் பாடிய தேவாரத்தில் இருபத்து மூன்று பண்கள் அமைந் துள்ளன அவையாவன : செவ்வழி, தக்கராம், நேர் திறம், புறநீர்மை, பஞ்சமம், நட்ட பாடை, நைவளம், அந்தாளிக் குறிஞ்சி, காந்தாரம், பழம் பஞ்சுரம், மேக ராகக் குறிஞ்சி, கொல்லிக் கெளவானம், பழந்தக்கராகம், குறிஞ்சி, நட்டராகம், வியாழக்குறிஞ்சி, செந்திறம், செந் துருத்தி, தக்கேசி, கொல்லி, இந்தளம், காந்தார பஞ்சமம், கெள சிகம், பியந்தை, சீ காமரம். சாதாரி என்பனவாம். இவ்விருபத்து மூன்று பண்களும் நாயன்மார் மூவராலும் அவர்களாலேயே இசையமைத்துப் பாடப்பெற்ற தனிப் பெருமையுடையவனாம்.

தேவாரப் பண்களில் பகற்பண், இராப்பண் என்ற பகுப்பு முறை பழமையானதாகும் விடியற்காலையில் பாடவேண்டிய பண் புறநீர்மைப்பண் ஆகும் அதனை இக்காலத்தில் “பூபாளம்’ என வழங்குவர் காலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/79&oldid=1376037" இலிருந்து மீள்விக்கப்பட்டது