பக்கம்:கட்டுரை வளம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கட்டுரை வளம்


பொருளை எண்ணியவாறும் உணர்ந்தவாறும்மற்றவர்க்கு என்றும் நிலைத்த சுவை பயக்கக்கூடிய முறையில் எழுதி வைத்துச் சென்றதே இலக்கியமாகும். ஆதலின், மொழி வாயிலாக வாழ்க்கையை உணர்த்துவதே இலக்கியம்’ என்பர் மேலை நாட்டு அறிஞர் 'ஹட்சன்' அவர்கள். இதனையே 'ஆபர்கிராம்பி' அவர்கள், மொழி வாயிலாக உணர்த்தப்படும் கலையே இலக்கியம்” என்பர். சிலர் ‘இலட்சியம்’ என்ற வடசொல்லின் திரிபே இலக்கியம் என்பர். ஆனால், அறிஞர் க. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், இலங்கு இயம்’ எனப் பிரித்து மொழிக்குச் செம்மையான வேலியாய்த் துலங்குவதே இலக்கியம்’

இலக்கிய ஆசிரியன் வாழ்க்கையை நுணுகிப் பார்க்கின்றான்; கூர்ந்து பார்க்கின்றான். வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியிலோ பல நிகழ்ச்சிகளிலோ தோய்கின்ற அவனது உள்ளம் தான் பெற்ற அந்த உணர்ச்சிகளைப் பிறர் நெஞ்சில் பதிய வைக்க ஒரு வடிவம் கொடுக்க முனைகின்றது. அவன் தான் பெற்ற அனுபவம் அல்லது தோய்ந்த



1. Literature is a vital record of what men have seen in life; what they have experienced of it what they have thought and felt about those aspects of it which have the most immediate and enduring interest for all of us.

It (Literature) is thus fundamentally an expression of life through the medium of language.

—Hudson. “An introduction to the Study of the

Literature.”

P. 10

2. Literature is an art by which expression is achieved, in language. Poetry is the translation of experience into language.

—L. Abercrombie, ‘The Idea of Great Poetry,” P. 22.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/8&oldid=1252813" இலிருந்து மீள்விக்கப்பட்டது