பக்கம்:கட்டுரை வளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7 8 கட்டுரை வளம்

மருதப்பண்ணினையும், மாலையில் செவ்வழிப் பண்ணி னையும், நள்ளிரவில் குறிஞ்சிப் பண்ணினையும் பாட வேண்டுமென்பது பழந்தமிழ் இசை மரபாகும்.

‘பாலை யாழொடு செவ்வழி பண்கொள மாலை வானவர் வந்து வழிபடும்’

என்று திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் பாடியுள்ளமை ஈண்டு நோக்கத்தக்கது.

வாயினாற் பாடுவதோடு மட்டுமல்லாமல் இசைக் கருவியோடு இசைத்தும் பாடல்கள் பாடப்பட்டன என்பது தெரியவருகிறது. அக்காலத்தே இசைக்கருவிகள் பல இருந்தன என்பதும் தேற்றம். சங்க காலத்திலும் சிறிய யாழினை வைத்திருந்த பாணன் சிறுபாணன்’ என்றும், பெரிய யாழினை வைத்திருந்த பாணன் பெரும் பாணன்’ என்றும் வழங்கப்பட்டனர். யாழ்ப்பாணர்.” ‘மண்டைப் பாணர் என்ற பிரிவினரும் அக்காலத்தே இருந்தனர். ‘மாசில் வீணையும்’ என்ற பாடலில் நாவுக்கரசர் வீணையினைக் செவிக்கின்பம் பயக்கும் செம்மையான இசைக் கருவியாகக் கொண்டுள்ளார். மேலும், இசையுருவங்களைக் காப்பாற்றி வருவதோடு அவற்றை மாறுபடாமல் வழிவழி வளர்த்து வருவன இசைக் கருவிகளாகும். இசைக்கருவிகள் தோற்கருவி துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும். பண்டைத் தமிழிசைவாணர் இக்கருவிகள் கொண்டு ஏழிசைத்திறனை வழுவின்றி இசைத்து வெளிப் படுத்தி இசை நுட்பங்களை இனிமையாகப் புலப்படுத் தினர் என்ற செய்தி,

“குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறல் மரபிற் பெரும்பாண் இருக்கையும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/80&oldid=1376040" இலிருந்து மீள்விக்கப்பட்டது