பக்கம்:கட்டுரை வளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இசையின் தொன்மையும் வளர்ச்சியும் 79.

என வரும் சிலப்பதிக்காரத்தின் இந்திரவிழவூ ரெடுத்த காதைத் (36-38) தொடர்கொண்டு அறியலாம்.

“குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.”

என்ற திருக்குறளானும் (66) இசைக்கருவிகளுள் குழலும் யாழும் சிறப்பிடம் பெறத்தக்கன வென்பதை அறியலாம்.

இதுபோன்றே தேவராத்திருப்பதிகங்களில் வேறுவேறு இசைக்கருவிகள் குறிக்கப்படுகின்றன.

“பாடல்வீணை முழவம் குழல்பண் ணாகவே ஆடு மாறு வல்லான்.”

-இரண்டாம் திருமுறை : 61

என்றும்,

“குழலோடு கொக்கரை கைத்தாளம் மொங்தை குறட்பூதம் முன்பாடத் தானாடுமே”

-ஆறாந் திருமுறை : 4-7

என்றும் வரும் திருப்பதிகத் தொடர்கள் தேவார கால இசைக்கருவிகளை உணர்த்தும், தேவாரத் திருப்பாடல் களில் இடக்கை, உடுக்கை, கத்திரிக்கை, கல்லவடம், கல்லலகு, கிணை, குடமுழா, கொக்கரை. கொடுகொட்டி, சல்லரி, தக்கை, தகுணரிச்சம், தண்ணுமை, பறை பிடவம், முழவு மொந்தை, முரவம் முதலிய தோற்கருவிகளும், வேய்ங்குழல் முதலிய நரம்புக் கருவிகளும், தாளம் முதலிய கஞ்சக்கருவிகளும் பயின்று வந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/81&oldid=1376045" இலிருந்து மீள்விக்கப்பட்டது