பக்கம்:கட்டுரை வளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 கட்டுரை வளம்

திருவாசகத்தில் திருவம்மானை, திருப்பொற்சுண் ணம் திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப் பூவல்லி, திருவுந்தியார், திருத்தோனோக்கம், திருப் பொன் னுாசல் என்பன இசைத்தமிழ்த் துறையைச் சார்ந்த பாடல் வகைகளாகும்.

இசைத்தமிழின் பொற்காலமான தேவார காலத்தில் நாயன்மாரால் அருளிச்செய்யப்பட்ட தேவாரத்திருப்பதி கங்கள் பண்முறையோடு ஒதப்பெற்று வந்துள்ளமையைக் கல்வெட்டுக்கொண்டு உணரலாம். விசயநந்தி விக்கிரம னாகிய நந்திவர்ம பல்லவனது 17-ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 750) எழுந்த திருவல்லம் திருக்கோயிற் கல்வெட்டு ஒன்றில் ‘திருப்பள்ளித்தாமம் பறிப்பார்க்கும் திருப்பதிகம் பாடுவாருள்ளிட்ட பல பணி செய்வோருக்கும் நெல்லு நானுாற்றுக்காடியும்’ என்று குறிப்பிடப்படுவதால், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே திருக் கோயில்களில் தேவாரப்பதிகங்கள் முறையாக ஒதப் பட்டன என்பதைத் தெளியலாம். ஆயினும் தேவாரத் திருமுறையினை நாடெங்கும் பரப்பிய பேரரசன் தஞ்சை யில் பிரகதீச்சுரர் திருக்கோயிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனே ஆவன். இவனது ஆறாம் ஆண்டில் எழுந்த திருநல்லம் கோயில் கல்வெட்டின் பகுதி வருமாறு: ‘'ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்க்குத் தி ரு ப் ப தி ய ம் விண்ணப்பம் செய்ய உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் கொடுத்த பிடாரர் நாற்பத்தெண்மரும், இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின் மர்க்குப் பேரால் நிசதம். நெல்லு முக்குறுணி நிவந்த மாய், ராஜகேசரியோ டொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால், உடையார் உள்ளுர்ப்பண்டாரத்திலே பெறவும்’ என வரும் கல்வெட்டுப் பகுதியால், திருக் கோயில்களில் திருப்பதிகங்கள் பாட ஒதுவார் நாற்பத் தெண்மர் நியமிக்கப்பட்டிருந்த நம் பண்டைக்காலச் செய்தியினை அறிந்து இறும்பூதெய்துகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/82&oldid=1376052" இலிருந்து மீள்விக்கப்பட்டது