பக்கம்:கட்டுரை வளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 கட்டுரை வளம்

சிவக்கொழுந்து தேசிகர், பெருங்கரைக் கவிக்குஞ்சர பாரதி, திருக்கடவூர் அபிராமி பட்டர், வையை மகா வைத்தியநாதய்யர். மாயூரம் வேத நாயகம் பிள்ளை, சென்னிகுளம் அண்ணாமலை செட்டியார், இராமலிங்க அடிகள் ஆகியோர் இசைத்தமிழ் உலகிற்குப் பெருந் தொண்டாற்றினர்.

இந்நூற்றாண்டில் தோன்றிய பாரதியார், ‘வித்து

வான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்துகொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளிலே பழம்பாட்டுகளை மீண்டும் பாடுதல் நியாயமில்லை. அதனால், நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தார். பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசனார் ஆகிய மூவரும் இசைத்தமிழுக்குரிய பாடல்களை எழுதி உதவினர். மேலும் கவிஞர்களில் யோகி சுத்தானந்த பாரதி யார், பெரியசாமித்துாரனார். என். எஸ். சிதம்பரம், உளுந்துார்ப் பேட்டைச் சண்முகம் முதலியோர் இசைப் பாடல்களை எழுதி இசைத்தமிழ் உலகிற்கு அளித்து வருகின்றனர்.

தமிழிசைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து, தமிழ் இசை இயக்கம் கண்டு தொண்டாற்றிய பெருமை, மறைந்த பெரியார் ராஜா சர். அண்ணாமலைச் செட்டி யார் அவர்களையே சாரும். 1943-ல் தமிழ் இசை இயக்கம் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு உறுதுணையாகச் சர்.ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களும், கோவை திரு. சி. எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களும் தொண்டாற்றினர். இரசிகமணி ‘டி. கே. சி. கதை. மணி 'கல்கி' முதலியோரும் துணை நின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/84&oldid=1376064" இலிருந்து மீள்விக்கப்பட்டது