பக்கம்:கட்டுரை வளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கானல் வரி 85

வந்த போது எதிர்ப்பாட்டுப் பாடினாள் இதனை ஆசிரியர் இளங்கோவடிகள், கட்டுரை வாயிலாக,

“ஆங்குக் கானல் வரிப்பாடல்

கேட்ட மாநெடுங்கண் மாதவியும் மன்னுமோர் குறிப்புண்டிவன்

றன்னிலை மயங்கினானெனக் கலவியான் மகிழ்ந்தாள்போற்

புலவியால் யாழ்வாங்கித் தானுமோர் குறிப்பினள் போற்

கானல்வரிப் பாடற்பாணி நிலத்தெய்வம் வியப்பெய்த

ணிேலத்தோர் மனமகிழக் கலத்தோடு புணர்ந்தமைந்த

கண்டத்தாற் பாடத்தொடங்குமன்’

-சிலம்பு : கானல்வரி, 24

என்று கூறுகிறார். நிலத்தெய்வம் வியப்பெய்த, நீள், நிலத்தோர் மனமகிழ மாதவி இசைத்த பாட்டு தானொன் றின்மேல் மனம் வைத்து மாயப்பொய் பலகூட்டும் மாயத் தாள் பாட்டாக அவனுக்குப்பட்டது. எனவே, “விடுதல் அறியா விருப்பு,’ வெறுப்பாயிற்று. அவன் அவளைத் துறந்து ஏவலாளர் பின்தொடரப் படர்ந்தான்.

பல நாளும் அன்போடு ஒன்றி வாழ்ந்த கோவலனும் மாதவியும், பிரிய நேர்ந்த காரணம் யாது? இதனை அடிகளே கூற முற்பட்டிருக்கிறார். யாழிசை மேல் வைத்துத்தன் ஊழ்வினைவந் துருத்த தாகலின், உவவுற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தனனாய்’ என்று கூறிச் செல்கிறார். ஆயின், இந்தக் காரணம் நமக்குப் பொருத்தமாகப் படவில்லை. யாதோ ஒரு காரணத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/87&oldid=1376076" இலிருந்து மீள்விக்கப்பட்டது