பக்கம்:கட்டுரை வளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கானல் வரி 87

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவா தொழிதல் கயற்கண்ணாய் மங்கை மாதர் பெருங்கற்பென்

றறிந்தேன் வாழி காவேரி!’

-சிலம்பு : கானல்வரி, 2

இந்தப் பாடலில் மாதவி தவறு கண்டாள். கோவலன் உள் மனத்தில் எழுகின்ற எண்ணமெல்லாம் பாட்டாய்ப் பரிணமித்தது. ‘கண்ண கிதான் உள்ளிருந்து பாடு கிறாளோ! என்று ஐயுறும் அளவுக்கு அவன் பாட்டு அமைந்திருக்கின்றது. கண்ணகியின் பெருங்கற்பைப் பாராட்டியதாகவும், மனையறம்படுத்த காதையில் அவன் பேசும் உலவாக் கட்டுரையின் சாயலாகவும், அவன் பாட்டு நமக்குத் தோன்றுகின்றது. இதனையே மாதவி, அவன் வேறொரு பெண்ணின் மேல் காதல் கொண்டு உள்ளம் நெக்குருகிப் பாடுவதாகக் கொண்டாள். மேலும்:

“பொழில்தரு நறுமலரே! புதுமணம் விரிமணலே!”

என்று தொடங்கும் குறியிடம் கூறும் பாடலிலும் மாதவி இக்கருத்தையே கண்டாள். தவள முத்தம் குறுவாள் செங்கண், குவளை யல்ல கொடிய கொடிய’ என்ற பாடல் அவள் கொண்ட எண்ணத்திற்கு உரமூட்டியது. இறுதி யாகக் கோவலன் பாடிய,

சேரல் மடவன்னம் சேரல் நடை ஒவ்வாய் சேரல் மடவன்னம் சேரல் கடை ஒவ்வாய் ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின் சேரல் மடவன்னம் சேரல் நடை ஒவ்வாய்!”

-சிலம்பு : கானல் வரி, 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/89&oldid=1376084" இலிருந்து மீள்விக்கப்பட்டது