பக்கம்:கட்டுரை வளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கானல் வரி 89.

“தம்முடைய தண்ணளியுங் தாமும்தம் மான்றேரும் எம்மை நினையாது விட்டாரோ !! விட்டகல்க; அம்மென் இணர அடும்புகாள் ! அன்னங்காள் ! நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் !

-சிலம்பு : கானல் வரி, 38.

என்று அவள் பாடிய பாட்டு, உயர்நிலைப் பாட்டாய், சிலப்பதிகாரத்தின் மணியாய் விளக்கமுறுகிறது. இறு தியாக அவள் பாடி முடிக்கும் பாட்டு, கோவலன் அவளை விட்டுப் பிரிந்து போகக் காரணமாய் அமைகிறது.

‘அடையல் குருகே ! அடையலெங் கானல்; அடையல் குருகே ! அடையலெங் கானல், உடைதிரை நீர்ச்சேர்ப்பற் குறுகோ யுரையாய் ! அடையல் குருகே அடையலெங் கானல்:

-சிலம்பு : கானல் வரி : 46.

என்ற பாடலில் கோவலன், மாதவி தன்னை விலக்கும் குறிப்பைக்காண்கிறான். மாதவியின் பாடல் இயற்கையை எல்லாம் கை கோத்துச் செல்லும்படி அமைகிறது :

“பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று

மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும்.”

-சிலம்பு : கானல் வரி, 51 : 3-4

என்று கூறி மாதவி தன் கானல் வரியை முடிக்கிறாள். கோவலன் மாதவியை மாயப் பொய் பல கூட்டும் மாயத் தாளாய் எண்ணிப் பிரிகிறான்.

கோவலன் மனம் பண்பட்ட மனமன்று; மாதவியின் அகமனத்தை அவன் முற்றிலும் அறிய இயலவில்லை. மாறாக, மாதவியோ, புடத்தில்இட்ட தங்கமாய்க் காட்சி தருகிறாள். ஆயின் மாதவி கோவலனைப் பற்றித் தவறாக எண்ணிய எண்ணம் சரிதானா என்று ஆய்ந்து பார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/91&oldid=1376089" இலிருந்து மீள்விக்கப்பட்டது