பக்கம்:கட்டுரை வளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 கட்டுரை வளம்

திருக்கலாம்; புலவியால் இந்த முறையும் கோவலனை மாற்றலாம் என்று எண்ணினாள். ஆயின், புலவி முற்றி விட்டது. அஃது ஊடற்குரிய காலமன்று என்பதை அவள் ஒர்ந்திலள். எனவே, கதையின் திருப்பத்தைக் கானல் வரியிலே காண்கிறோம்.

மாதவி ஒரு கலைச்செல்வி, கலையால் வாழ்க்கையை வெல்ல இயலும் என்று நம்பினாள். கோவலனும் அவள் கலையில் ஒன்றி நிற்கும் நிலையை அடையவில்லை. கலையே இருவரையும் பிணித்தது. இறுதியில்இருவரையும் பிரித்ததும் அதுவே. கோவலன் சீர்தூக்கும் இயல்பினையும் மாதவி பெருங்கற்புக்குரிய பொறுமைப் பண்பினையும் மறந்தனர். கலையின் செவ்வியை இருவரும் அறியத் தவறினர். முடிவு, வாழ்க்கைக்கு வெற்றியாயும் கலைக்குத் தோல்வியாயும் முடிந்தது. கண்ணகியின் பெருங்கற்பே இறுதியில் வென்றது என்பதையே கானல் வரி தெளிவாக விளக்கி நிற்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/92&oldid=1377327" இலிருந்து மீள்விக்கப்பட்டது