பக்கம்:கட்டுரை வளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. தமிழ் இலக்கியங்களில் இதிகாசக் கருத்துகள்

பாரத நாடெங்கும் தொன்மைக் காலந்தொட்டுப் பரவி மக்கள் மனத்தில் நீங்காது நல்லதோர் இடத்தினைப் பெற்றுள்ள கதைகள், பாரதமும், இராமாயணமும் ஆகும். இக்கதைகள் இரண்டும் முதற்கண் கதைவடிவில் வழி வழியாக நீண்ட காலம் வழங்கி வந்து, பின்னரே நூல் வடிவு கொண்டிருத்தல் வேண்டும். இவ்விரு பெரு நூல்களும் 'இதிகாசங்கள்’ என்று சிறப்பித்துக் கூறப்படு வனவாகும். இக் கதைகள் முதன்முதல் வடமொழியில் தோன்றிப் பின்னர் இந்தியமொழிகள் அனைத்திலும் உருக்கொண்டிருந்தல் வேண்டும். கவிஞர் பலர் பற்பல காலங்களில் இக்கதை முழுமையினையும் தனி நூலாகவும், நாடகமாகவும், அல்லது கதையின் ஒரு பகுதியினைத் தனி நூலாகவும் செய்துள்ளனர். சில கதைகள் சுருங்கியும், சில கதைகள் விரிவுபெற்றும், சில கதைகள் திரிந்தும் காணப் படுகின்றன. நாட்டு நடப்பு, சூழ்நிலை முதலிய காரணங் களால் இவ்வேறுபாடுகள் ஏற்பட்டு விட்டன. இக்கதைகள் பல கிளைக்கதைகளுக்கும் இடம் தந்து, அக்கிளைக் கதைகள் எல்லாம் இன்று தனித்தனியான நூல்களாய் வாழும் சிறப்பும் பெற்றுள்ளன. வான்மீகி முனிவர்க்கு முன்னும் இராம காதை நாட்டில் வழங்கியுள்ள உண்மை யினை வான்மீகி இராமாயணத்தின் முதற்சருக்கமாகிய நாரத வாக்கியங் கொண்டு அறியலாம். இப்பழம்பெருங் கதைகள் நாடோடிப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன: பல பழமொழிகளில் பயின்று வழங்குகின்றன. மேலும், இக்கதைகள் பாரத நாட்டில் மட்டுமன்றிக் கடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/93&oldid=1377333" இலிருந்து மீள்விக்கப்பட்டது