பக்கம்:கட்டுரை வளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியங்களில் இதிகாசக் கருத்துகள் 9.3

பாரதக் கதைகள் பாரதமக்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தனவாகும். விரிவான ஒரு செய்தியினை 'இது என்ன பாரதமாய் இருக்கிறதே!’ எனக் கூறும் மரபு இன்றும் உண்டு. இன்றும் பாமர மக்கள் கொடையிற் சிறந்தவனைக் 'கர்ணன்’ என்றும், நெறி தவறாத தரும சீலனைத் 'தருமன்’ என்றும், பலம் மிக்கவனை 'வீமன்’ என்றும், ஆற்றல் மிக்கவனை 'விசயன்' என்றும், கலக மூட்டித் திரியும் ஒருவனைச் ‘சகுனி” என்றும் கூறும் வழக்கும் உண்டு. தருமன், அருச்சுனன், சகாதேவன், பாஞ்சாலி, திரெளபதி முதலிய பெயர்களை இன்றும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இட்டு வழங்குகின்றார் கள் இதனாலும் பாரதக் கதையில் எத்துணையளவு மக்கள் மனம் ஈடுபட்டிருந்தது என்பதனை நன்கு உணரலாம்.

அடுத்து, எட்டுத்தொகை நூல்களுள் நற்றினை குறுந் தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்னும் ஐந்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடிய புலவர், ‘பாரதம் பாடியபெருந்தேவனார்’ என்று வழங்கப் படுகிறார், இவர் பாரதம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் இருந்திருக்கவேண்டும் என்பது தெரிகிறது. இடைக்காலத்தில் ‘பாரத வெண்பா’ என்ற நூல் வழங்கி யிருக்கிறது. வில்லி பாரதத்திற்குப் பின்னர் இந்நூல்கள் வழக்கொழிந்திருத்தல் கூடும்.

பாதப்போரில் தமிழரசர்கள் பெருஞ்சோறு அளித் தார்கள் என்ற செய்தி புறநானுாற்றின் பழைய பாட லொன்றால், அறியக்கிடக்கின்றது.

“அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலங்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! “ -புறம் : 2 : 1.3-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/95&oldid=1377340" இலிருந்து மீள்விக்கப்பட்டது