பக்கம்:கட்டுரை வளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 கட்டுரை வளம்

எனவும், புறம் 366-ஆம் பாடல் தருமபுத்திரனைக் கோத மனார் பாடியது’ என்றும் காணப்படுகின்றன. அப் பாடலில் ஆசிரியர் கோதமனார், தருமபுத்திரனை 'அற வோன் மகனே! மறவர் செம்மலே!' என்று குறிப்பிட்டுள் ளார். இது பாண்டவர் ஐவருள் ஒருவனாகிய தருமபுத்தி ரனைக் குறித்ததாகுமோ என்பது ஆராய்தற்குரியது. பெரும்பாணாற்றுப்படையில், பாண்டவர் ஐவர், கெளரவர் நூறறுவரைப் போர்க்களத்தில் வென்றமை போலப் பாட்டுடைத் தலைவனாம் இளந்திரையன் பகைவர்களைப் போர்க்களத்தே பொருது வென்ற செய்தி புலப்படுத்தப் படுகிறது.

“ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப் பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுங்தேர் ஆராச் செருவின் ஐவர் போல’

-பெரும்பாண். 415-417

என்பது காண்க.

அடுத்து, சிறுபாணாற்றுப்படையில் வில் விசயன் காண்டவ வனத்தை எரித்த செய்தியும், வீமன் வகுத்த மடை நூற்படியே ஒய்மானாட்டு நல்லியக் கோடனின் அரண்மனையில் பற்பல உணவுவகை ஆக்கப்பெற்ற செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

‘காவெரி யூட்டிய கவர்கணைத் துாணி பூவிரி கச்சைப் புகழோன் தம்முன் பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்’

-சிறுபாண். 238-241.

என்பது காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/96&oldid=1377343" இலிருந்து மீள்விக்கப்பட்டது