பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

board exc

98

boolean


எல்லா மின்னணு பாகங்களும் அமைக்கப்பட்டுள்ள ஒரு கணினி.

board exchange warranty : அட்டை மாற்றக்கூடிய வாரன்ட் : முதல் அட் டையில் பழுது ஏற்பட்டால் அதற் குப் பதிலாக புதிய ஒன்றை மாற்றித் தருவதற்கு வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் உறுதி.

board level : அட்டை நிலை: மரப் பலகையில் அல்லாது அச்சிட்ட மின் சுற்று அட்டையில் ஏற்றப்படும் மின் சுற்றுச் சாதனங்கள்.


body works : உடல் இயக்கம் : மனித உடல் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட கல்வி மென் பொருள்.

BOF : பிஓஎஃப் : Beginning of File என்பதன் குறும் பெயர். முதன் முதலாகத் திறக்கும் போது உள்ள கோப்பின் நிலை. கோப்புகாட்டியை மீண்டும் அமைக்கும் ஆணை அல்லது கட்டளை.

boilerplate : கொதிகலன் தகடு; கொதி தட்டு : பல்வேறு ஆவணங்களில் சொல்லுக்குச் சொல் மீண்டும் பயன் படுத்தப்படுகின்ற பனுவலின் பகுதி.

boilerplate document : கொதிகலன் தகட்டு ஆவணம் : சில தரமான பத்தி களில் தகவலைக் கொண்டு தேர்ந் தெடுத்த பத்திகளை ஒன்றாக இணைத்து ஏற்படுத்தப்படும் ஆவணம்.

bolddeclaration : தடித்த எழுத்தமைத்தல் : அச்சிட்ட பக்கத்தில் சொற்கள் தடிமனாக அமைய அச்சுக் கட்டுப் பாட்டு எழுத்துகளை சொல் செயலக ஆவணத்தில் சேர்த்தமைத்தல்.

boldface bomb : தடித்தமுகக் குண்டு : Abend, and Crash போன்றது. ஆணைத் தொடர்களை அழிக்கும் வைரசின் ஒரு அம்சம்.

boldface font : தடித்த அச்செழுத்து : வழக்கமான எழுத்துகளைவிட கறுப் பாகவும் கனமானதாகவும் உள்ள எழுத்துகளின் தொகுதி. தடித்த அச் செழுத்தில் எல்லா எழுத்துகளும் தடித்ததாக இருக்கும்.

boldfacing : தடித்த எழுத்து அச்சு; தடிப்பாக்கம் : சில அச்சுப் பொறி களிலும் சொல் செயலாக்க அமைப்பு களிலும் உள்ள ஒரு தன்மை. கொட்டை எழுத்து அச்சு போன்ற தோற்றத்தைத் தருவது. நிழல் அச்சு முறை மூலம் கொட்டை எழுத்து அச்சு போன்ற தோற்றம் பல அச்சுப் பொறிகளில் தரப்படுகின்றது.

bold printing: தடித்த அச்சு : சுற்றிலும் உள்ள எழுத்துகளைவிட அழுத்த மாக சில எழுத்துகளை உருவாக்கும் திறன். நிழல் அச்சு அல்லது பலமாக அடித்தல் மூலம் சில அச்சுப் பொறி கள் தடித்த எழுத்துகளை உருவாக்கு கின்றன.

Bollee, Leon : போலி, லியோன் : திரும்பத் திரும்ப கூட்டுவதற்குப்பதி லாக நேரடியாக பெருக்கலைச் செய்யும் முதல் எந்திரத்தை 1886இல் வெற்றிகரமாக வடிமைத்த ஒரு ஃபிரெஞ்சுக்காரர்.

bomb : வெடி : 1. ஒரு ஆணைத் தொட ரின் மகத்தான தோல்வி. 2. ஒரு அமைப்பைத் தடுக்கக் கூடிய ஒரு ஆணைத் தொடரை எழுதி ஒரு அமைப்பை வேண்டுமென்றே நாசம் செய்தல்.

boolean algebra : பூலியன் குறிக் கணக்கு : குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக்