பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

boot dri

100

border

காமல் பயன்படுத்தப்பட முடியாது. ஏற்றும் வட்டு வட்டாகவோ அல்லது நிலைவட்டின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம்.

boot drive : ஏற்றும் வட்டியக்கி : இயக்க அமைப்பு அமைந்துள்ள வட்டுஇயக்கி.

boot record : ஏற்றும் பதிவேடு : கணினியைத் துவக்குவதற்கு வேண்டிய இன்றியமையாதவற்றைக் கூறும் செயலாக்க அமைப்பு பகுதி. ஏற்றும் தகவலைச் சேமித்துவைக்கும் இரண்டாம் நிலை சேமிப்பகத்தின் பகுதி.

boot Rom : ஏற்றும் ரோம் : சேவையகத்திலோ அல்லது பிற தொலை தூர நிலையத்திலோ வேலை நிலையம் இயங்க அனுமதிக்கும் நினைவகச் சிப்பு. booting எக்கித் தள்ளல்; boot sector புதைமதி வட்டக்கூறு  ; boot strap முன்னோடி.

bootstrapping: தொடக்கம் : பூட்ஸ்ட் ராப் என்னும் சிறிய அரிச்சுவடி ஆணைத் தொடரைப் பயன்படுத்தி வேறொரு ஆணைத் தொடரை ஏற்றி, ஒரு கணினியைத் துவக்குதல்.

boottape: ஏற்றும் நாடா: பல கணினிகளில் ஏற்றும் செயல்முறையை நாடாவில், பொதுவாக கேசட்டில் சேமிப்பார்கள். நாடா இயக்க முறையைப் பயன்படுத்தும் கணினியை ஏற்றும் நாடா அடங்கியுள்ள, நாடா இயக்கி இல்லாமல் பயன்படுத்த முடியாது.

bootvirus. ஏற்றும் (கிருமி) வைரஸ் : ஃபிளாப்பி எனும் நெகிழ்தட்டில் ஏற்றும் பகுதியில் எழுதப்பட்ட வைரஸ். அத்தகைய நெகிழ்வட்டை ஏற்றும்போது அது கணினி அமைப்பை பிடித்துக் கொள்கிறது. சான்றாக, மைக்கேல் ஏஞ்சலோ வைரசானது அது பிடித்துள்ள வட்டை ஏற்றினால் மைக்கேல் ஏஞ்சலோ பிறந்த நாளான மார்ச் 6ஆம் நாள் அன்று அது ஏற்றப்பட்ட கணினியில் உள்ள தகவல்களை அழித்துவிடும்.

boot/booting : ஏற்று/ஏற்றுதல் : கணினியைத் துவக்கு என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் தனி மொழிச் சொல். நாம் கணினியின் பொத்தானை இயக்கியவுடன், ஏற்றும் பகுதியிலிருந்து ஆணை வந்து கணினி இயங்குகிறது. அந்த உற்பத்தியாளரே ரோமில் (ROM) சிறிய ஆணைத்தொடராக அமைத்திருப்பார். இவ்வாறாக Boot என்றால் கணினியைத் துவக்கு என்பது பொருள்.

bootable disk: ஏற்றக்கூடிய வட்டு : இயக்க அமைப்பைக் கொண்டுள்ள வட்டு. பொதுவாக இது நெகிழ் வட்டின் இயக்கியில் ஏற்றக்கூடிய நெகிழ் வட்டு இல்லையென்றால், நிலை வட்டிலிருந்து எடுத்துத் துவக்கும் ஆணை ஏற்றப்படும்.

bootstrap:ஏற்றும் வசதி, முன்னோடி: கணினியில் பெரிய ஆணைத்தொடர் நுழைக்க அனுமதிக்கும் வசதி.

bootstrap loader: முன்னோடி ஏற்றி: ஏற்றுப் பதிவேட்டின் முதல் பகுதி. இந்தத் தொழில் நுட்பத்தின்படி ஒரு ஆணைத் தொடரின் முதல் சில ஆணைகளின் மூலம் மீதமுள்ளவற்றையும் உள்ளிட்டுச் சாதனத்திலிருந்து கணினியில் கொண்டு வர முடியும்.

BOP : பிஓபி : Bit-Oriented Protocol என்பதன் குறும்பெயர்.

border : எல்லை : திரையின் மீது இயங்கும் சாளரத்தில் விண்டோஸ், பயனாளரின் பணியிடத்தைச் சுற்றியுள்ள விளிம்பு. ஒரு ஆவணம் அல்லது வரைகலையைச் சுற்றி தெரியக்