பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

break sig

103

browse


சோதனை செய்தல் அல்லது பிழை நீக்க ஆணைத் தொடர்களில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

break signal : நிறுத்த சமிக்ஞை : தொகுதி கோப்பு செயல்படுவதை நிறுத்தவோ அல்லது ஆணைத் தொடரை நிறுத்தவோ அல்லது செய்தித் தகவல் தொடர்பு நிகழ்வை நிறுத்தவோ பயன்படுத்தப்படும் சிறப்பு எழுத்து அல்லது எழுத்துகளின் தொகுதி.

bridge : இணைப்பான் : பல செய்தித் தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இணைத்து ஒரு பல்முனை மின்சுற்றினை உருவாக்கும் சாதனம்.

bridgesware : இணைப்புப் பொருள் : ஒருவகைக் கணினிக்கு எழுதப்பட்ட ஆணைகளை வேறு வகையான கணினி புரிந்து கொள்வதற்கு மொழி பெயர்ப்பு செய்யும் ஆணைத் தொடர்கள்.

briefcase computer : கைபெட்டி கணினி : ஒரு கைப்பெட்டி (Briefcase) யின் உள்ளே பொருத்தக்கூடிய, எடுத்துச் செல்லும் கணினி.

brightness : ஒளிமயம் : 1. கணினி வரைபடங்களில் ஒளி இருத்தல் அல்லது குறைத்தல் (வெண்மை, பழுப்பு, கருமை ஆகிய நிறங்களில் மாறக் கூடியது). 2. சில சிஆர்டி முகப்புகளில் திரையில் காட்டப்படுவதை மாறுபடுத்திக் காட்டுதல் - குறிப்பாக சில பகுதிகளை மட்டும் தெளிவாகக் காட்டுதல்.

broadband : அகலக்கற்றை : குரல் நிலை தகவல் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் செய்தித் தகவல் தொடர்புகளை அனுப்புதல். நுண் அலை ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக் கோள் போன்றவைகளில் அகலக்கற்றை தகவல் தொடர்பு வழித்தடங்கள் செயல்படுகின்றன. ஐம்பது இலட்சம் செய்தி வேகம் (baud) வரை இதன் மூலம் தகவல்களை அனுப்ப முடியும். Narrow-band உடன் ஒப்பிட்டு பார்க்கவும்.

broadband transmission : அகன்ற கற்றை அனுப்பும் முறை : அனுப்பும் ஊடகத்தை பல வழித்தடங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் தகவல் மின்சுற்றுகளை அனுப்பும் முறை.

broadcast : ஒலிபரப்பு : ஒரே நேரத்தில் பல இடங்களுக்குத் தகவலை அனுப்புவது.

BROM : ப்ரோம் : Bipolar Read Only Memory என்பதன் குறும் பெயர்.

bromide : ஒளியுணர் தாள் : ஒளி உணரும் தாள். டைப்செட்டில் பயன்படுவது.

Brooklyn bridge : புரூக்ளின் பாலம் : ஐந்தாம் தலைமுறை கணினி அமைப்புகளில் உள்ள பி.சி. கோப்பு மாற்ற ஆணைத் தொடர். தகவல்களை லேப் டாப்பாகிய மடி கணினி, டெஸ்க் டாப்பாகிய மேசை கணினிக்கும் இடையில் மாற்றுகிறது.

brownout : பழுப்பு வெளியேறல் : வழக்கத்தைவிடக் குறைவாக மின் சக்தி குறையும்போது 'புரவுன்அவுட்' ஏற்படுகிறது. மின்சக்தியின் தேவை, அதன் உற்பத்தியைவிட 50 ஹெர்ட்ஸ் அதிகரிக்கும்போது இந்நிலை ஏற்படுகிறது. இதனால் கணினியின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

browse : தேடு : தகவல்தள ஆவணங்களைத் தேடுவதற்கும், சொல் செயலகம் போன்றவற்றில் திரையில் செய்திகளை தொகுப்பதற்கும் பயன்படும் (டிபேஸ்) ஆணைத் தொடர்