பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bubble jet 105 buffer


bubble jet : குமிழ் ஜெட் : கேனனின் இங்க் ஜெட் அச்சுப்பொறி தொழில் நுட்பம். லேசர் அச்சுப் பொறியினை விட மலிவானது.

bubble sort : குமிழ் அடுக்கு ; குமிழி வரிசையாக்கம்.

bucket : வாளி : கூட்டாக அழைக்கப் படும் பதிவேடுகளின் குழுவைச் சேமித்து வைக்க இருப்பகத்தில் இருக்கும் குறிப்பிட்ட பகுதி. வன் பொருள் தொடர்பானதாக இருக்க லாம் அல்லது 'தற்சார்பு முகவரி வாக்கம்' (hasing) மூலம் முடிவு செய்யக் கூடியதாக இருக்கலாம்.

buddy system : மொட்டு அமைப்பு : நினைவகத்தை நிர்வகிக்கும் முறை. இதன் அளவுகள் 2-ன் மடங்காக இருக்கும்.

budget forcasting model : நிதி நிலை முன்மதிப்பீட்டு மாதிரி : தரமானகணக் கீட்டுச் செயல்பாடுகளைப் பயன் படுத்தி தனித்தனி துறையிலிருந்து அளிக்கக்கூடிய நிதிநிலைத் தகவல்களைத் தொகுப்பதற்குப் பயன்படக் கூடிய மாதிரி . பண ஓட்டம், ஒரு பங்குக்கான வருமானம் மற்றும் பிற நிதித் துறை விகிதாச்சாரங்களை முன்னறிவிப்புச் செய்யும் திறன்களையும் இதில் உள்ள டக்கலாம். இதன் விளைவாக நிதி நிலைக்கு ஏற்றவாறு செயல்பாடு அமைப்பு விரி தாள் பணித்தொகுப்புகளில் இத்தகைய மாதிரிகள் பொது வாக சேர்க்கப்படும்.

buffer : தாங்கி, இடையகம்; நினைவறை, இடைநிலைநினை வகம் : பல்வேறுபட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப்படுத் தவோ பயன்படுகின்ற தற்கா லிக இருப்பிடப் பகுதி. மெது வாக உள்ளீடு செய்கின்ற சாதனமான முகப்பு விசைப் பலகையுடன் அதி வேகமாக இயங்குகின்ற கணினியின் முதன் மைப்பகுதியுடனும் இணைப்பதற் குப் பயன்படுத்தலாம்.

buffered computer : இடைத் தடுப்பு உள்ள கணினி : ஒரே நேரத்தில் உள் ளீடு / வெளியீடு மற்றும் செயலாக்க நடைமுறைகள் அளிக்கின்ற கணினி.

buffering : தாங்குதல் : தகவல் தொடர்பு பாதையில் தகவல்களை அனுப்புவதைத் தாமதப்படுத்து வதோ அல்லது தற்காலிகமாக சேமித்து வைப்பதோ செய்யப்படுவது.

buffer flush : கூடுதல் வெளியேற்றல் : நினைவகத்திலிருந்து வட்டுக் குத் தகவலை மாற்றுதல்.

buffer memory : கூடுதல் நினைவகம்; இடைநிலை நினைவகம் : உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக்