பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

buffer pool 106 bunny

கொள்ளப் பயன்படுத்தப்படும் தற் காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது.

buffer pool : கூடுதல் தொகுப்பு : கூடுதல் இருப்பிடங்களுக்காக நினை வகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி.

bug : பிழை தவறு : ஒரு கணினியின் ஆணைத் தொடரிலோ அல்லது அதன் அமைப்பிலோ, அதன் வன் பொருள் பகுதியிலோ ஏற்படும் ஒரு தவறு. Debug என்றால் பிழைகளை நீக்கி கோளாறுகளை சரி தாகும்.

bulk storage : மொத்த இருப்பகம் : அதிக அளவில் தகவல்களைச் சேமிப் பது. பொதுவாக, நீண்டகால தேவைக் காக இவ்வாறு செய்யப்படும்.

bullet-in font : உள்ள மைந்த எழுத்தச்சு: அச்சுப் பொறியின் ரோமில் (ROM) நிரந்தரமாகக் குறியீடு இடப்பட்ட அச்செழுத்துகள்.

bullet : பொட்டு : ஒரு பட்டியலில் உள்ள வகைகளைத் துவங்கப் பயன் படுத்தப்படும் பொட்டுப் போன்ற அடையாளம்.

bulletin board : அறிவிப்புப் பலகை; தகவல் பலகை : கணினியைப் பயன் படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது ஆணைத் தொடர்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனு மதிக்கும் கணினி முறைமை. மின் னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.

bulletin board service : அறிக்கைப் பலகை சேவை : ஒரு வணிக தகவல் செய்தித் தொடர்பு கட்டமைப்பு. இதில் சந்தாதாரர்கள் செய்திகளை அனுப்பலாம்; மென்பொருள் ஆலோசனை பெறலாம்; ஆணைத் தொடர்களை ஏற்றிப் பெறலாம் இன்னும் பலவற்றைச் செய்யலாம். BBS என்று சுருக்கி அழைக்கப் படுகிறது. Bulletin Board System என்றும் சொல்லப்படுகிறது.

bump mapping : பம்ப் மேப்பிங் : கணினி வரைகலையில் ஒரு தொழில் நுட்பம்.

bundle : கட்டு; உள்ளிணைந்த : மென் பொருள் துணைப் பொருள்கள் மற்றும் சேவைகளை ஒரு கணினி விலையின் பகுதியாகச் சேர்ப்பது.

bundled : உள்ளிணைக்கப்பட்ட : கணினி பொருட்கள் மற்றும் சேவை கள் முழுவதையும் ஒரே விலைக்கு சேர்த்துத் தருகின்ற ஒரு கணினி உற்பத்தியாளரைக் குறிப்பது

bundled software : உள்ளிணைந்த மென்பொருள் : கணினி அமைப்பின் மொத்த விலையில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்ட மென்பொருள்.

bundled/unbundled: உள்ளிணைந்த பிரிக்கப்பட்ட : ஒரு விலைக்கு அளிக் கப்படும் வன்பொருள் / மென் பொருளின் மொத்தப் பொதிவுத் தொகுதிகள் பிரிக்கப்பட்ட அமைப்பு களில் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி விலைகள் உண்டு.

bundling : உள்ளிணைத்தல்; உடன் சேர்த்தல்: கணினி அமைப்பின் விலை யிலேயே மென்பொருள், பரா மரிப்பு, பயிற்சி மற்றும் பிற பொருள் கள் அல்லது சேவைகளைச் சேர்த்தல்.

bunny suit: பன்னி உடை :சிப்புதயா ரிக்கும் இடங்களில் மனித நுண்ணு யிரிகள் தொற்றாமல் தடுக்க தூய்மை யான அறையில் பாதுகாப்பு ஆடை அணிதல்.