பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bus bri 108 Business

bus bridge : மின் இணைப்புத் தொகுதிப்பாலம் : இரண்டு மின் இணைப் புப் தொகுதிகளை ஒன்றாக இணைக் கும் சாதனம்.

bus card : மின் இணைப்புத் தொகுதி அட்டை : விரிவாக்க அட்டை. இது கணினியின் விரிவாக்க மின் இணைப்புத் தொகுதியில் பொருத் தப்படுவது.

bus common : பொதுமின் இணைப்புத் தொகுதி : வன்பொருள் சாதனங் களுக்கோ கணினியின் உள்பாகங் களுக்கோ அல்லது தகவல் தொடர்பு கட்டமைப்பில் நிலைகளுக்கிடை யிலோ செயல்படும் வழித்தடம். ஒரு கணினியில் மின் இணைப்புத் தொகுதி அமைப்பு பயன்படுமா னால், அதன் செயலகங்கள், நினை வகம், வெளிப்புற அலகுகள் ஆகிய அனைத்தும் மின் இணைப்புத் தொகுதியில் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மின் இணைப்புத் தொகுதியில் இரண்டு வழித் தடங்கள் உள்ளன. ஒன்று தகவல் இருக்கும் இடத்தைக் கண் டறியவும், மற்றொன்று தகவலை மாற்றவும் செய்கிறது. கட்டமைப் பில் உள்ள அனைத்து உறுப்புகளும் மின் இணைப்புத் தொகுதியில் இணைக்கப்படும்.

bus extender : மின் இணைப்புத் தொகுதி விரிவாக்கம் : சோதனைக் காக சுற்றிலும் உள்ள அட்டைகளுக்கு வெளியே ஒரு அச்சிட்ட மின்சுற்று அட்டையைத் தள்ளும் அட்டை. அது முதலில் ஒரு விரிவாக்க இடத்தில் பொருத்தி பின்னர் மின் இணைப்புத் தொகுதி விரிவாக்கியில் சேர்க்கிறது. இதில் பல விரிவாக்க இடங்கள் மட் டும் இருக்கலாம் அல்லது அவற்றில் மின்சக்தி அளிக்கும் வசதியும் இருக்க லாம்.

bush button : அழுத்து பித்தான்.

Bush, Vannevar (1890-1974) : புஷ், வான்னேவர் : மின்தடங்களினால் ஏற் படும் கணித சமன்பாட்டு வேறுபாடு களைத் தீர்க்கும் முயற்சியில் ஈடு பட்டபோது, 1930ஆம் ஆண்டு பல் வேறு சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய முதல் தானியங்கிக் கணினியை உரு வாக்கினார். மாறுபாட்டு ஆய்வன் Differential Analyzer என்று அழைக்கப் பட்ட கணினி, இன்றைய ஒப்புமை கணினிகளுக்கெல்லாம் முன்னோடி யானது. 100 டன் எடையுள்ள இக் கணினியில் பல்லாயிரக் கணக்கான வெற்றிடக் குழல்கள் பயன்பட்டன.

business applications : வணிகப்பயன் பாடுகள் : சம்பளப்பட்டி, வர வேண் டிய , கொடுக்க வேண்டிய பணம் பற்றிய கணக்குகள், இருப்பு கணக் கெடுத்தல் போன்ற அன்றாட கணக் கீட்டு நடைமுறைகளுக்குப் பயன் படும் கணினி ஆணைத் தொகுப்பு கள் அறிவியல் பயன்பாடுகளுக்கு மாறானது.

business data processing : வணிக தகவல் செயலாக்கம் : சம்பளப்பட்டி, பட்டியலிடல், கணக்கெடுத்தல் போன்ற வணிக நோக்கங்களுக்காக நடைபெறும் தகவல் செயலாக்கம்.

Business Equipment Manufacturers Association (BEMA) : பீமா : Business Equipment Manufacturers Association என்பதன் குறும்பெயர். கணினி கருவிகள் மற்றும் அலுவலக எந்திரங் களை உற்பத்தி செய்யும் நிறுவனங் களைக் கொண்ட சங்கம். பயன்பாட் டாளர்களது பிரச்சினைகளைத் தீர்க்க வும், பொது நலனுக்காக தகவலைப் பயன்படுத்தவும், கணினி மற்றும் தகவல் செயலாக்கக் கருவிகளுக் கான தர நிர்ணயங்களை உருவாக்க