பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

byte mac 111 byte ori

செய்யப் பயன்படுத்தப்படும் இரும இலக்க தொகுதி. 3. சில சமயம் B என்றும் சுருக்கமாக அழைக்கப் படுகிறது.

byte machine : எட்டியல் எந்திரம் : மாறும் எட்டியல் Byte துண்மி (Bit) நீளங்களுக்கு நேரடியாக அணுகி இயங்கக் கூடிய ஒரு கணினி .

byte order : எட்டியல் வரிசை : ஏஐஎக்ஸ் விரிவு எக்ஸ் பலகணியில் துண்மிக்கு வரையறை அல்லது பிக்ஸ் மேப் தகவலுக்காக பணியா ளார் வரையறுக்கும் எட்டியல் களின் வரிசை.

bytes per inch (BPI) : பிபிஐ: Byter Per Inch என்பதன் குறும் பெயர். ஒரு அங்குல காந்த நாடாவில் கொள்ளக் கூடிய எட்டியல்களின் எண்ணிக்கை. (தகவல்) அடர்த்தியைப் பதிவு செய் யும் பொதுவான அளவுகோல்.

byte specifications : எட்டியல் வரையறைகள் : வன்பொருள் பற்றிய வரை யறைகள். எண் துண்மிகளில் செய் யப்படுகின்றன. சான்றாக 80 மீமிகு எட்டியல் வட்டு 8 கோடி எழுத்துகளை அடக்குகிறது. ஒரு மீமிகு எட்டியல் நினைவகம் 18 லட்சம் எழுத்துகளை சேமிக்கிறது. குறைந்த துல்லிய வரைகலை கோப்பில் 8,000 எட்டியல்கள் மட்டுமே அடங்கும். ஆனால், மேற்பட்ட எட்டியல்கள் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்கப்படு கிறது.

byte string : எட்டியல் சரம் : ஸ்கேன் செய்த ஆவணத்திலிருந்து இலக்க மயமாக்கப்பட்ட வடிவம்.

bytemode : எட்டியல் முறை : மையச் செயலகத்திற்கும் வேறு வெளிப்புறச் சாதனத்திற்கும் தகவல் மாற்றலைக் குறிப்பிடுவது. இம்முறையில் ஒரு நேரத்தில் ஒரு தனி எட்டியல் மாற்றப் படுகிறது.

byte oriented protocol : எட்டியல் சார்ந்த விதிமுறைகள் : தகவல் தொடர்பு விதிமுறை. இதில் கட்டுப் பாட்டுக் குறியீடுகள் முழுவதும் எட்டியல்களாகவே இருக்கும். ஐபிஎம் மற்றும் பிற விற்பனையாளர் கள் பயன்படுத்தும் பைசிங்க்ரனஸ் விதிமுறைகளும் இதற்கு எடுத்துக் காட்டுகள்.