பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

C 112 CAE

C : சி : ஒரு கணினி மொழி - நுண் கணினிகளில் பயன்படுத்த வடி வமைக்கப்பட்ட ஒரு ஆணைத் தொடர் மொழியின் முழுப் பெயர். பயன்படுத்த எளிமையாகவும், மிக வும் திறன்மிக்கதாகவும் தொகுப்பு களை உருவாக்கவும் உள்ள மென் பொருள். கீழ் நிலை எந்திரக் கட்டுப் 'பாடும், உயர் நிலை சொல் தொடர் களையும் இணைத்து உருவாக்கப் பட்ட மொழி,

cable : கம்பி வடம்: ஒரு அமைப்பின் இரண்டு பகுதிகளை ஒன்றாக இணைக்கப் பயன்படும் கம்பிகளின் கற்றை அல்லது மின்சாரக் கம்பிகள். மின் சக்தி அல்லது மின்சமிக்ஞை களைக் கொண்டு செல்கிறது.

cable connector : கம்பி வடம் இணைப்பி : ஒரு கணினியையும், வெளிப்புற உறுப்புகளையும் இணைக் கும் இணைப்புக் குழாய்களுக்குப் பயன் படுத்தப்படும் ஆண் / பெண் செருகி (Plug).

cabletext : கம்பி வட உரை : கூட் டச்சுக் கம்பி வழியாக ஒளிக்காட்சி வரை அனுப்புதல்.

cache : கேஷி : தற்காலிக இருப்பக மாகப் பயன்படும் ஒரு சிறிய அதிவேக நினைவகம்.

cache controller : கேஷி கட்டுப் படுத்தி : கேஷி நினைவகத்திற்கு படி / எழுது இயக்கங்களைக் கட்டுப் படுத்தும் மின்னணு மின்சுற்று. கட்டுப்பாட்டு பொறியானது இன் டெல் 82385 போன்ற ஒரு சிப்பு வாகவோ அல்லது தனிச் சாதன மாகவோ இருக்கலாம்.

cache memory: விரைவு நினைவகம்; அவசரத்தேவை நினைவகம் : தக வலைத் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான சிறிய அதிவேக நினைவகம். மெதுவாக இயங்கும் பெரு நினைவகத்திற்கும், வேகமான மையச் செயலக அலகுக்கும் இடை யில் வழக்கமாகப் பயன்படுத்தப்படு வது. விரைவு அட்டை (scratch pad) என்றும் அழைக்கப்படுகிறது.

caching : கேஷிங் : விரைவு அணுக லுக்காக கேஷி நினைவகத்தில் தகவல் களை வைத்திருத்தல்.

CAD : காட் : Computer - Aided Design என்பதன் குறும் பெயர். கணினி வழி வடிவமைப்பு.

CADAM : கேடம் : Computer - Graphics Augmented Design and Manufacturing என்பதன் குறும் பெயர். கணினி வரைபடங்களைக் குறிப்பது.

CAD/CAM : கேட்/கேம் : கணினி வழி வடிவமைப்பு/கணினி உதவும் உற் பத்தி எனப் பொருள்படும். Computer Aided Design / Computer - Aided Manu facturing என்பதன் குறும் பெயர்.

CADD : கேட் : Computer Aided Design and Drafting என்பதன் குறும் பெயர். அளவு அமைத்தல், சொல் நுழைவு உள்ளிட்ட, வடிவமைப்புக்கான கூடு தல் வசதிகள் கொண்ட காட் அமைப்பு கள்.

CADD centre : கேட் மையம்.

CAE : சிஏஇ : Computer - Aided Engi neering என்பதன் குறும் பெயர். கணினி உதவிடும் பொறியியல் அடிப்படை பிழை திருத்தத்திற்கான வடிவமைப்பை அலசுகிறது அல்லது உற்பத்தி செய்யப்படக்கூடியதுதானா என்பதன் செயல்பாட்டையும், பொரு ளாதாரத்தையும் ஆய்வு செய்து தருகிறது. கேட் கேம் வடிவமைப்பு தகவல் தளத்தில் இருந்து எடுக்கப் பட்ட தகவலைப் பயன்படுத்தி ஒரு