பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

call ins

114

canned


போன்ற வரைபடங்களைக் கொண்டதுதான் "கம்பி உருவ" மாதிரிகள். ஆரம்ப காலத்தில் கணினி வரைபடங்களுக்குச் சமமானதாக இவை கருதப்பட்டன.

call instruction : அழைப்பு ஆணை : ஆணைகளின் புதிய வரிசையை இயக்குவதை திசை மாற்றிய பிறகு, ஆணைத் தொடரின் ஆரம்ப வரிசைக்குத் திரும்பி வருவதை அனுமதிக்கும் ஆணை.

callback PPD : மீண்டும் அழைக்கும் பிபிடி : வருகின்ற அழைப்புகளைக் கண்காணிக்கும் ஒரு சாதனம்.

called routine : அழைக்கப்பட்ட துணை வாலாயமுறை : ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றும் ஒரு ஆணைத் தொடர். இதை ஒரு அழைப்பு அல்லது ஆணைத் தொடரின் பிரிந்து போகும் ஆணையின் மூலம் அணுக முடியும்.

calling programme : அழைக்கும் ஆணைத்தொடர் : வேறொரு ஆணைத் தொடரைத் துவங்கி வைக்கும் ஆணைத் தொடர்.

calling sequence : அழைக்கும் வரிசை : கொடுக்கப்பட்ட ஒரு துணைச் செயல்பாட்டை அழைப்பதற்குத் தேவையான தகவல்கள் மற்றும் குறிப்பிட்ட ஆணைத் தொகுதிகள்.

Calloc : சிஅலாக் : 'சி' மொழியில் உள்ள ஒரு பணி. எம்.அலாக், (malloc) ரிஅலாக் (realloc) போன்றது.

CAM : கேம் : கணினி உதவிடும் உற்பத்தி எனப் பொருள்படும் Computer Aided Manufacturing என்பதன் குறும்பெயர்.

cambridge ring : கேம்ப்ரிட்ஜ் வளையம் : இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வடிவமைத்த அதிவேக வளாக இணையம் (LAN).

camera-ready artwork : ஒளிப்படக் கருவிக்குத் தயாரான கலை வேலை : வணிக அச்சகப் பகுதியில் ஒளிப் படம் எடுக்கத் தயாராக உள்ள அச்சிடும் பொருள். ஒரு முறை ஒளிப் படம் எடுத்தபின் அச்சுத் தகட்டினைச் செய்யத் தயாராக உள்ளது.

Canadian Information Processing Society; CIPS : கனடாவின் தகவல் செயலாக்கச் சங்கம்; சிப்ஸ் : தகவல் செயலாக்கத் துறையில் பொதுவான ஆர்வமுள்ள கனடாக்காரர்களை ஒன்று திரட்ட ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. தங்களது வாழ்க்கையை கணினி தகவல் செயலாக்கத் துறைகளில் அமைத்துக் கொண்டுள்ள 400-க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், வணிகர்களை உறுப்பினர்களாகக் கொண்டது.

cancel: ரத்து; விடு; நீக்கு : அப்போது தட்டச்சு செய்த வரியை நீக்குவதற்கான விசைப் பலகைச் செயல்பாடு.

candidates : வேட்பாளர்கள் : திட்டத்தின் ஆரம்ப வடிவமைப்பு நிலையில் வழங்கப்படும் மாற்றுத் திட்டங்கள்.

canned programme: அடைக்கப்பட்ட ஆணைத் தொடர் : ஒரு சிக்கலுக்கு நிலையான தீர்வை வழங்கும் ஆணைத் தொடர் தொகுதி. கணினி உற்பத்தியாளர்கள் மற்றும் மென் பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தத் தயாரான நிலையில் பயனாளருக்கு அளிக்கும் இந்த ஆணைத் தொடர்களை தனிநபர்களும், பல வணிக நிறுவனங்களும் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது. Custom Software - க்கு எதிர்ச் சொல்.