பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

card rea

118

carriage


card reader : அட்டை படிப் பொறி; அட்டை படிப்பி : அட்டைகளில் துளையிடப்பட்ட தகவலைப் படித்து, அதை கணினியின் நினைவகத்திற்கு மாற்றும் உள்ளிட்டுச் சாதனம்.

card reproducer: அட்டை மறு தயாரிப்புப் பொறி : ஒரு அட்டையைப் போன்றே வேறொரு அட்டையில் துளையிட்டுத் தரும் சாதனம்.

card row : அட்டை வரிசை : ஒரு துளையிட்ட அட்டையின் துளையிடும் நிலையில் உள்ள கிடைமட்ட வரிசைகளில் ஒன்று.

card sorting : அட்டை பிரித்தல்; அட்டை வரிசைப்படுத்தல் : தனிப்பட்ட அட்டைகளில் போடப்பட்டுள்ள துளைகளுக்கேற்ப துளையிட்ட அட்டைகளைப் பிரித்து வைத்தல்.

card stacker : அட்டை அடுக்கி : துளையிட்ட அட்டை தகவல் செயலாக்க எந்திரத்தைக் கடந்த பின் அட்டைகளைச் சேர்த்து வைக்கும் கொள் கலம்.

card-to-disk converter : அட்டையிலிருந்து வட்டுக்கு மாற்றும் பொறி : துளையிட்ட அட்டைகளிலிருந்து வட்டு சேமிப்பகத்துக்கு தகவல்களை நேரடியாக மாற்றித் தரும் சாதனம்.

card-to-tape converter : அட்டையிலிருந்து நாடாவுக்கு மாற்றும் பொறி : துளையிட்ட அட்டைகளிலிருந்து காந்த அல்லது காகித நாடாவுக்கு தகவல்களை நேரடியாக மாற்றும் சாதனம்.

card verification : அட்டை சோதித்தல்; அட்டை சரிபார்ப்பு : விசைத் துளையிடலின் துல்லியத்தை சோதிக்கும் செயல்முறை. அதே தகவல் மூலத்தைப் படித்துச் சோதிக்கும் பொறியின் விசைகளை அழுத்தி, முதலில் துளையிட்டதை இரண்டாவதாக ஒருவர் சோதிப்பார். ஏற்கனவே துளையிடப்பட்ட அட்டைகளின் துளையை விசையை அழுத்தி, சோதித்து அவை சரியாக இல்லையென்றால் பிழை என்பதைக் காட்டும்.

caret : கேரட்; முகடு : 1. ஒரு எண்ணின் மூலமானது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் காட்டும் குறியீடு. 2. எங்கே செய்தியை நுழைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட திரையில் அடையாளச் சுட்டியாகப் பயன்படுத்தப்படும் அல்லது அடையலாம்.

carpal tunnel syndrome : கார்பல் சுரங்கப்பாதை உணர்வு : மணிக்கட்டைச் சுற்றிலும் உள்ள திசுக்களில், சுருங்கினாலோ அல்லது தழும்பு ஏற்பட்டாலோ முக்கிய நரம்பு சுருக்கப்படுதல். இது கைகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தக் கூடியது.

carriage : நகர்த்தி; ஏந்தி : ஒரு தட்டச்சுப் பொறி அல்லது அச்சுப் பொறியில் இடங்களை நகர்த்தவோ அல்லது காகிதப் படிவங்களை வெளியேற்றவோ செய்யும் கட்டுப்பாட்டு எந்திர அமைப்பு.

carriage control key : நகர்த்தி கட்டுப்பாட்டு விசை : அச்சுப் பொறியின் நகர்த்தியை ஆரம்பத்திலோ அல்லது அது இருக்க வேண்டிய இடத்திலோ மீண்டும் கொண்டு வரும் பொத்தான்.

carriage control tape : நகர்த்தி கட்டுப்பாட்டு நாடா : ஒரு வரி அச்சுப் பொறியில் வரி நகர்த்துதலைக் கட்டுப்படுத்தும் தகவலைத் துளையிட்டுள்ள நாடா.