பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cascade sor

121

catalog


தற்குக் கொடுப்பதுடன் அடுத்த நிலையை ஒழுங்குபடுத்தும்.

cascade sort : தொடர் அடுக்கி : வெளிப்புற நாடா கொண்டு வரிசைப்படுத்தும் ஒரு முறை.

cascading menu : தொடரும் பட்டியல் : ஒரு பட்டியலிலிருந்து கொண்டு அடுத்த பட்டியலைத் துவக்கல். இத்தகைய பட்டியலில் இதை அடுத்து வலது அம்புக்குறி இருக்கும்.

case : கேஸ் : 1. சி, டிபேஸ், க்ளிப்பர் போன்றவற்றில் ஆணைத் தொடர்களை எழுதுவதில் பயன்படும் ஒதுக்கப்பட்ட சொல். 2. தகவல் அமைப்பினை உருவாக்கும் எல்லா நிலைகளிலும் பயன்படும் மென்பொருள் வழக்கமான தொழில் நுட்பங்களை உருவாக்க தானியங்கி முறைகளைப் பயன்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் பொருந்தும் ஒரு மொழியை உருவாக்குவதே இதன் இறுதி இலக்கு.

case sensitive : எழுத்தின் தன்மை உணர்த்தல் : தலைப்பெழுத்து, கீழெழுத்துகளை வேறுபடுத்துவது. இத்தகைய மொழியில் தலைப்பெழுத்து "A" வுக்கும் கீழெழுத்து "a"க்கும் உள்ள வேறுபாட்டை கணினி கண்டறியும்.

cashless society : பணமிலாச் சமுதாயம் : வாங்குபவரின் வங்கிக் கணக்கிலிருந்து கொடுப்பவரின் வங்கிக் கணக்குக்கு உடனடியாகப் பணத்தைச் செலுத்துவதன் மூலம் வாங்கும் பரிமாற்றத்தை முடிக்கும் கணினி அமைப்பு. ரொக்கமாக எதுவும் மாற்றப்படுவதில்லை. சம்பளக் காசோலைக்குப் பதிலாகவும், சரக்குகள் மற்றும் சேவைகளுக்கும் இவ்வாறு பணமாற்றம் செய்யப்படுகிறது.

cassette : நாடாப்பெட்டி; ஒளிச்சுருள்; ஒளிப்பேழை : தகவல் சேமிப்புக்குப் பயன்படும் காந்த நாடாவைக் கொண்டுள்ள சிறிய பெட்டி.

cassette drive : ஒளிநாடா இயக்கி.

cassette interface : நாடாப் பெட்டி பரிமாற்றச் சாதனம்; நாடாப் பெட்டி இடைமுகப்பு : ஒரு கணினிக்கும் ஒரு காந்த நாடாப் பதிவுப் பெட்டிக்கும் இடையில் தகவல் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மின்சுற்று.

cassette recorder: நாடாப் பெட்டி பதிவகம் : நாடாப் பெட்டிகளைப் பயன்படுத்தி இலக்க முறை தகவல்களைப் பதிவு செய்து சேமிக்கவும், பின்னர் ஒருமுறை இந்த தகவல்களைக் கணினியின் உள் இருப்பகத்தில் ஏற்றவும் வடிவமைக்கப்பட்ட சாதனம். நுண் கணினிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

cassette tape : நாடா பெட்டியின் நாடா : ஏறக்குறைய 1/3 செ.மீ. அகலமுள்ள காந்த நாடா. சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பது. நாடாப் பெட்டியில் உள்ள நாடாவை அதன் பதிவாகப் படிக்கிறது.

casting : வார்ப்புரு : ஆணைத் தொடர் அமைத்தலில், ஒரு தகவலின் வகையை இன்னொன்றாக மாற்றுதல்.

CAT : கேட் : Computer Assisted Training and Computerised Axial Tomography என்பதன் குறும்பெயர். கணினி உதவிடும் பயிற்சி மற்று கணினிமய அச்சு ஊடுகதிர் உள்தளப் படமுறை Tomography என்பதன்சுருக்கம்.

catalog : பட்டி; அடைவு : ஒவ்வொரு வகையாக விவரித்து வரிசையாகச் சேர்த்து வைப்பது. ஆணைத் தொடர்கள் அல்லது ஒரு வட்டில் சேமிக்கப்