பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cathode

122

CCP


பட்டுள்ள தகவல்களின் பட்டியலை வரிசைப்படுத்துதல். ஒரு வட்டைப் பட்டியமைப்பது என்றால் ஒரு வட்டில் உள்ள அனைத்துக் கோப்புகளின் பட்டியலையும் அச்சிட்டுத் தருமாறு கணினியைக் கேட்பதாகும்.

cathode ray tube (CRT): எதிர் மின் வாய் கதிர்க் குழாய் : தகவலைக் காட்டக் கூடிய திரை உள்ள மின்னணுக் குழாய்.

CAT scan : கேட் ஸ்கேன் : Computer Assisted Tomography Scaning என்பதன் குறும் பெயர். மருத்துவ ஆய்வு மற்றும் நோயறிதல்களில் பயன்படுவது.

cathode : எதிர்மின்வாய் : மின்னணுவியல் சொல். மின்னணுக்களை மறி நிலை Negative சக்தியுள்ள எதிர் மின் வாயிலிருந்து நேர் நிலை (positive) சக்தியுள்ள நேர்மின்வாய்க்கு மாற்றும் சாதனம்.

CAU : காவ் : Controlled Access Unit என்பதன் குறும்பெயர். அடையாள வளைய பிணையங்களுக்காக ஐபி எம் உருவாக்கிய தானறி குவிப்பான் (Intelligent Hub) ஐபிஎம். -மின் குறுகிப் பரவிய இணையம். மேலாண்மை மென்பொருள் வழியாக பழுதான முனைகளை "ஹப்" (Hub) அடையாளம் காட்டும்.

CBASIC : சிபேசிக் : 8080, 8085 மற்றும் இஸட்80 நுண் செயலகக் கணினிகளுக்குப் பிரபலமான மொழி.

CBBS : சிபிபிஎஸ் : Computerized Bulletin Board Service என்பதன் குறும்பெயர். கணினிமய செய்தி அறிக்கை சேவை என்பதன் சுருக்கப் பெயர்.

CBEMA : சிபிஇஎம்ஏ : Computer and Business Equipment Manufacturers Association என்பதன் குறும்பெயர் கணினி மற்றும் வணிகக் கருவி உற்பத்தியாளர்களின் சங்கம் என்பதன் சுருக்கம்.

CBI : சிபிஐ : Charles Babbage Institute என்பதன் குறும்பெயர்.

CBL: சிபிஎல் : Computer Based Learning என்பதன் குறும்பெயர்.

CCD : சிசிடி : Charge Coupled Device: என்பதன் குறும்பெயர். சக்தி இணைந்த சாதனம் என்பது இதன் சுருக்கப் பெயர்.

CCFT: சிசிஎஃப்டி : Cold Cathode Fluorescent Tube என்பதன் குறும்பெயர். பின்புற ஒளி வரும் திரையில் ஒளி உண்டாகும் வகைகளில் ஒன்று. மற்ற பின்புற ஒளிகளைவிட அதிக எடையுடனும், அதிக மின்சாரம் வாங்குவதாகவும் இது உள்ளது.

C3L : சி3எல் : Complementary Constant Current Logic என்பதன் குறும்பெயர்.

CCITT : சிசிஐடிடி : Consultative Committee International Telegraph and Telephone என்பதன் குறும்பெயர். பன்னாட்டுத் தந்தி மற்றும் தொலைபேசி ஆலோசனைக் குழு என்பது இதன் சுருக்கப் பெயர். உலகளாவிய தர நிர்ணயங்களை தகவல் தொடர்புத் துறையில் உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகள் பேரவை உருவாக்கியுள்ள ஒரு நிறுவனம்.

CCP : சிசிபி : Certification in Computer Programming என்பதன் குறும்பெயர். கணினி ஆணைத் தொடர் சான்றிதழ் என்பது இதன் சுருக்கப் பெயர். அமெரிக்கா, கனடா மற்றும் பல பன்னாட்டு இடங்களில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆணைத் தொடர் அறிவையும், வணிக, அறிவியல் மற்றும் சிறப்பு