பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

centronics

125

chaining



centronics interface : இடை இணைப்பு:கணினிகளையும் அச்சுப் பொறிகளையும் இணைக்கும் புகழ் பெற்ற ஒரே நேர பரிமாற்ற அமைப்பு. கணினிகளுக்கும் அச்சுப் பொறிகளுக்கும் இடையில் தகவல் தொடர்புக்கு ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கும் திட்டத்தைச் செயல்படுத்திய அச்சுப்பொறி உற்பத்தி நிறுவனம் சென்டிரானிக்ஸ்.

CCP : சிசிபி : Certificate in Computer Programming என்பதன் குறும்பெயர். இது கணினி ஆணைத் தொடர் சான்றிதழ் எனப் பொருள்படும்.

certification : சான்றிதழ் அளித்தல் : 1. ஒரு மென்பொருள் அதன் செயல் திறன் எண்பிக்கப்பட்ட பிறகு ஏற்றுக் கொள்ளல். 2. ஒருவர் குறிப்பிட்ட அளவு தொழில் முறையிலான தகுதியை அடைந்துவிட்டார் என்று கடுமையான தேர்விற்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் அளித்தல்.

chad : காகிதத் துண்டு : சேமிப்புச் சாதனத்தில் துளையிடப்பட்டவுடன் தனியாக விழும் நாடா அல்லது தொடர் எழுது பொருளில் துளையிட்டவுடன் வெளியே விழும் துண்டுக் காகிதம்.

chain : சங்கிலி : 1. சுட்டுக் கருவிகள் பதிவேடுகளை இணைத்தல். கடைசி பதிவேட்டுக்கும் முதல் பதிவேட்டுக்கும் இதன் மூலம் இணைப்பு ஏற்படுத்தப்படும். 2. வரிசையாகச் செய்ய வேண்டிய செயல் முறைகள்.

chaining : சங்கிலியிடல் : பதிவேடுகள், ஆணைத் தொடர்கள் மற்றும் இயக்கங்களின் தொடரை இணைக்கும் செயல்முறை. கணினியின் முதன்மை நினைவகத்தை விடப் பெரிதான ஆணைத் தொடர்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து செயல் படுத்துதல்.

chained file(s): இணைக்கப்பட்ட கோப்புகள்: ஒவ்வொரு பிரிவு தகவல் கட்டமும் அடுத்த ஒன்றுக்கு அழைத்துச் செல்லும் கோப்பு பாயின்டர் எனப்படும் சுட்டுகளைப் பயன்படுத்தி தகவல் கட்டங்களை இணைத்துள்ள தகவல் கோப்பு.

chained files : சங்கிலியிடப்பட்ட கோப்புகள்: சுட்டுக் கருவிகள் மூலம் தொடராக இணைக்கப்பட்ட தகவல் கோப்புகள்.

chained list :சங்கிலியிடப்பட்ட பட்டியல் : ஒவ்வொன்றும் அடுத்து வருவதைக் குறிப்பிடும் பட்டியல். சேமிக்கப்பட்ட அதே வரிசையிலேயே அதைத் திரும்பப் பெற வேண்டிய தேவையில்லை.

chain field: சங்கிலிப்புலம்: சேமிப்புச் சாதனத்தில் அடுத்ததாக சேர்க்கப் படாவிட்டாலும் ஆரம்பப் பதிவேட்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பதிவேட்டில் உள்ள புலத்தின் வரையறை.

chaining: சங்கிலியிடல்: 1. ஆணைத் தொடர்கள், செயல் முறைகள் அல்லது பதிவேடுகளை வரிசையாக இணைக்கும் முறை. 2. முதன்மை நினைவகத்தினைவிடப் பெரியதாக ஆணைத் தொடர்களை நிறைவேற்ற அனுமதிக்கும் முறை. இதில் பல சிறிய பணிக்கூறுகளாக (modules) உருவாக்கப்பட்டு அவை கணினியில் ஏற்றப்பட்டு வரிசையாக செயல்படுத்தப்படும்.

chaining (data chaining) : சங்கிலியிடல் (தகவல் இணைப்பு) : தகவல் தொகுதிகளை வரிசைப்படுத்துதல். அடுத்த தகவல் தொகுதி முகவெண்