பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chaining sea

126

character


ஆணையின் கடைசிப் பகுதியை எடுத்துக் கொள்வது.

chaining search : சங்கிலி முறைத் தேடல் : பதிவேட்டில் உள்ள முக வெண்களைப் பயன்படுத்தி, ஒரு கோப்பில் உள்ள தகவல் தேடும் நுட்பம். இதில் சங்கிலி முறையில் ஒவ்வொரு பதிவேடும் அடுத்த பதிவேட்டுடன் இணைக்கப்படும்.

chaining printer : சங்கிலி அச்சுப் பொறி : அச்சிடும் இடங்களில் செங்குத்தாகச் சுற்றும் சங்கிலியில் எழுத்துகளை அமைத்துள்ள அச்சுப் பொறி. அச்சுச் சங்கிலியில் அமைக்கப்பட்டுள்ள எழுத்துகளின் மீது ஒரு அச்சு சுத்தி அடிப்பதன் மூலம் காகிதத்தில் அச்சிடுகிறது.

chamfer : சாம்ஃபெர் : இரண்டு சந்திக்கும் கோடுகளுக்கு இடையில் சமன்படுத்தப்பட்ட விளிம்பு.

change agent : மாற்ற உதவியாளர் : ஒரு நிறுவனத்தின் மாற்றத்திற்கு எதிர்ப்பு ஏற்படின் அதைச் சமாளிக்கும் முறைமை ஆய்வாளர் (System Analyst).

channel capacity: இணைவழி ஆற்றல் : ஒரு தகவல் ஊடகத்தில் ஒரே நேரத்தில் சாத்தியமாகும் தகவல் வழித் தடங்கள.

change directory command: கோப்பக மாற்று ஆணை: டாஸ், யூனிக்ஸ் முறைகளில் செயல்படும் கட்டளை.

change dump : மாற்றத் திணிப்பு : முன்பு பதிவு செய்த நிகழ்வினை அடுத்து ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய நினைவகத்தின் அனைத்து தன்மைகளையும் வெளியிடல்.

change file: மாற்றக்கோப்பு: மாற்றப்பட்ட தகவல் கோப்பு. தலைமைக் கோப்பைப் புதுப்பிக்கப் பயன்படும் செயல் பரிமாற்றக் கோப்பு.

channel : இணைப்பு: வழி; தடம்; அலைவரிசை : 1. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட முனைகளை இணைக்கும் மின்சார அல்லது மின்னணு தகவல் அனுப்பும் பாதை. 2. துணைச் சாதனங்களை கணினியுடன் இணைக்கும் தகவல் பரப்பும் பாதை

channel adapter : வழி ஏற்பி : பல்வேறு வன்பொருள் சாதனங்களின் வழிகளிடையே தகவல் தொடர்பினை ஏற்படுத்தும் சாதனம்.

channel command : இணைப்பு கட்டளை : ஒரு உள்ளீடு/வெளியீடு இணைப்புச்செயல்படுத்தும்ஆணை.

channel map: இணைப்பு அமைபடம்: மிடி (midi) இணைப்புச் செய்திகளுக்குச் சேரவேண்டிய இணைப்புகள், வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் ஒட்டு அமைபடங்களைக் குறிப்பிடுகிறது.

channel programme : இணைப்பு ஆணைத் தொடர் : ஒரு அதிவேக வெளிப்புற செயல்படுத்தும் ஆணைகளின் தொகுதி. உள்ளீடு/வெளியீடு இயக்கத்தைத் துவக்கும் ஆணைத் தொடரின் ஆணை. இணைப்பு ஆணைத் தொடரைத் தனியாக இணைப்பு செயல்படுத்தும். மற்ற இயக்கங்கள் அதே வேளையில் கணினியால் செய்யப்படும்.

character:எழுத்துவகை;வரிவடிவம்: கணினி சாதனத்தில் சேமித்து, செயலாக்கப்படும் ஏதாவது ஒரு குறியீட்டெண், நிறுத்தக் குறியீடு அல்லது வெற்றிடம்.

character cell : எழுத்துச்ச சிற்றறை : காட்சித் திரை அல்லது அச்சுப் பொறி