பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

character sea

127

characters


யில் ஒரு தனி எழுத்தை அமைக்கப் பயன்படும் புள்ளிகளின் அமைப்பு 8 x 16 எழுத்துச் சிற்றறையில் 16 குறுக்குவிட்ட வரிசைகள் இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் 8 புள்ளிகள். இப்புள்ளிகளின் இணைப்பின் மூலமே எழுத்து உருவாகிறது.

character checking :எழுத்துச் சோதனையிடல்: எல்லா எழுத்துகளையும் ஒரு குழு அல்லது புலமாகச் சோதித்து ஒவ்வொரு எழுத்தையும் சரிபார்த்தல்.

character code : எழுத்துக் குறியீடு : எழுத்துத் தொகுதி ஒன்றைக் குறிப்பிடும் ஒரு எண் குறியீடு.

character data : எழுத்துத் தகவல் : அகர வரிசை எண் தகவல் அல்லது சொல்.

character density: எழுத்து அடர்த்தி: சேமிக்கும் தகவல்களின் அடர்த்தி. ஒரு செ.மீ அல்லது ச.அங்குலத்திற்கு எத்தனை எழுத்துகள் என்பதைக் குறிப்பிடுகிறது.

character device : எழுத்துச் சாதனம் : ஒரு நேரத்தில் ஒரு எழுத்து என்ற அளவில் தகவல்களை அனுப்பிப் பெறும் சாதனம்.

character field: எழுத்துப் புலம் : அகர வரிசை மற்றும் எண் எழுத்துகளைக் கொண்டிருக்கும் தகவல் புலம். Numeric field-க்கு எதிர்ச் சொல்.

character fill : எழுத்து நிரப்பு: இடங்களை நிரப்பப் பயன்படும் வெற்றிடம் போன்ற தகவல் அல்லாத எழுத்து.

character generator : எழுத்து உருவாக்கி : ஒரு திரை அல்லது அச்சுப் பொறியில் எண் அல்லது எழுத்துகளை ஏற்படுத்தும் மின்சுற்று.

character graphics : எழுத்து வரை கலை :அகர வரிசை எழுத்துகளைப் போல வரைகலையை உருவாக்க சிறப்பு சமிக்ஞைகளை ஒன்றாகக் கோர்த்தல். சான்றாக, தொடரும் எழுத்து வரைகலையினைப் பயன்படுத்தி படிவங்கள், வரைபடம் மற்றும் எளிய வரைகலைகள் அச்சிடப்படுகின்றன. அஸ்கி (ASCII) எழுத்துகளின் பகுதியாக இவை அமைகின்றன.

character machine : எழுத்து எந்திரம் : எட்டியல் எந்திரத்தைக் குறிப்பிடுகிறது.

character mode: எழுத்து முறை.

character-at-a-time printers : ஒரு நேரத்தில் ஒரு எழுத்து அச்சுப் பொறிகள்: தொடர்.அச்சுப் பொறிகள் என்று அழைக்கப்படும். ஒரு நேரத்தில் ஒரு எழுத்தினை மட்டுமே அச்சிடும் அச்சுப் பொறிகள்.

characterstic: எழுத்து சார்ந்த.

charactaristice :பண்பியல்புகள்

character map : எழுத்து அமைப்புப் படம் : காட்சித் திரையில் உள்ள கட்டங்களின் தொகுதி. இதில் உள்ள ஒவ்வொரு கட்டமும் ஒரு எழுத்து, எண் நிறுத்தக் குறியீடு அல்லது சிறப்பு எழுத்தைக் குறிப்பிடுகிறது.

character pitch : எழுத்துரு இடைவெளி: ஒரு வரியில் ஒரு அங்குலத்திற்கு இத்தனை எழுத்து என்று குறிப்பிடுவது.

character pattarn: எழுத்துத் தோரணி.

character reader: எழுத்து படிப்பொறி.

charactorset: எழுத்துரு இடஅமைவு.

characters per second: ஒரு நொடிக்கு இத்தனை எழுத்துகள்: குறைந்த வேக தொடர் அச்சுப் பொறிகளின் வெளி