child pro
131
chroma
child programme: சோதனை ஆணைத் தொடர்: ஒரு ஆணைத் தொடரின் உள்ளேயே இயக்கப்பட்டு, அதன் இயக்கம் தீர்ந்தவுடன் தனியாக செயல்படும் ஒரு ஆணைத் தொடர். முதன்மை ஆணைத் தொடரினால் அழைக்கப்பட்டு நினைவகத்தில் ஏற்றப்படும் இரண்டாம் நிலை அல்லது துணை ஆணைத்தொடர்.
child record : சேய்ப் பதிவகம்: கீழ் நிலைப் பதிவு: வரிசைக்கிரம தகவல்கள் அமைப்பில் இரண்டு அடுத்தடுத்த நிலையிலுள்ள பதிவேடுகளில் கீழ்நிலைத் தகவல்.
chip : சிப்பு : சிப்பு ஏராளமான மின்னணுச் சுற்றுக்களைக் கொண்டுள்ள ஒரு சிறிய சாதனம். ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுகள் வடிவத்தில் மின்னணு பாகங்கள் மெல்லிய சிலிக்கான்தகட்டின் மீது வைக்கப்படுகின்றன. கணினியை உருவாக்குபவை சிப்புகளே. கணக்கிடல், நினைவகம், கட்டுப்பாடு போன்ற பல் வேறு பணிகளை அவை செய்கின்றன.
chip carrier: சிப்பு கொண்டுசெல்லும் பகுதி : சிப்பு செய்வதற்கு ஈயம் போன்ற உலோகத்தில் அதன் அச்சை ஏற்றுதல். எல்லா திசைகளிலும் இணைப்பிகள் உள்ள சிப்புப் பொதிவுகள்.
chip family : சிப்புக் குடும்பம் : தொடர்புடைய சிப்புகளின் குழு. முதலாவது சிப்புவிலிருந்து ஒவ்வொரு சிப்பும் உருவாக்கப்படுகிறது.
chips : சிப்புகள்; சில்லுகள், சிம்புகள்.
chip select : சிப்புத் தேர்வு : சிப்புப் பெட்டியிலிருந்து வெளியே வரும் முனை, சிப்புவிற்கோ அல்லது சிப்புவிலிருந்தோ தகவல்களை எழுதுவதையும், படிப்பதையும் இது செயலற்றதாக்கும்.
chip set : சிப்புத் தொகுதி : ஒரு பணியைச் செய்வதற்காக சேர்ந்து இயங்க வடிவமைக்கப்பட்டுள்ள சிப்புகளின் குழு.
choice : தேர்வு : ஒரு (DOS) தொகுதிக்கோப்பு ஆணை. அது பயன்படுத்துபவரிடமிருந்து விசையடிக்கப்படுவதற்கு காத்திருக்கிறது. ஆணையின் உள்ளேயே ஏற்றுக் கொள்கிற விசைகளின் பட்டியல் குறிப்பிடப் படுகிறது.
choose : தேர்ந்தெடு : சாளரத்தில் (விண்டோஸ்) ஒரு செயலைச் செய்வதற்குச் சுட்டி அல்லது விசைப் பலகையை தேர்ந்தெடுப்பது. பட்டியலில் உள்ளபடி கட்டளைகளைத் தேர்ந்தெடுத்து பணிகள் செய்யப்படுகின்றன. பயன்பாடுகளைத் துவக்க 'ஐக்கான்' (icons)களைத் தேர்ந்தெடுக்கலாம்.
chooser:தேர்பவர்: மெக்கின்டோஷ் மேசை துணைப்பொருள், அச்சுப் பொறி ஃபைல் சர்வர் அல்லது கட்டமைப்பு மோடெம் போன்றவைகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது.
chop:நீக்கு;வெட்டு: தேவைப்படாத தகவலை வெளியேற்றுதல்.
chroma : நிறமி : வண்ணங்களை ஏற்படுத்த உதவும் நீர்மம், நிழல், சாயல் போன்றவை.