பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



chromaticity

132

circuit



chromaticity: நிறப்பொலி: வண்ணத்தின் தூய்மை மற்றும் மீதூன்றும் அலைநீளம் இவற்றை அளக்க முடியும் என்பதுடன் பிரகாசம் எவ்வளவாயினும் அதன் நீர்மை மற்றும் சாயலுக்கு ஏற்றதாக அமையும்.

chrominnance : நிறப் பொலிவு : வண்ணத்தைக் கட்டுப்படுத்தும் ஒளிக் காட்சி சமிக்ஞையின் பகுதிகள். chunking : தொகுத்தல் : இரும எண் முகவரிகளை பதினாறிலக்கத்துக்கு மாற்றும் முறை. 0011 1100 என்ற இரும எண்ணை பதினாறிலக்க எண் முறையில் 3C என்று மாற்றலாம்.

chunking along: தொகுத்துச் செல்லல்: நீண்ட நேரம் செல்லும், நம்பிக்கை மிக்க ஆணைத்தொடரின் செயல் பாட்டைக் குறிப்பிடும் குழுச் சொல்.

CICS: சிஐசிஎஸ்: Customer Information Control System என்பதன் குறும் பெயர். தொலைவிலிருந்து செய லாக்கம் புரியும் முனையங்களில் அதிகம் பயன்படுவது.

CIM : சிஐஎம் : Computer Input Microfilm: குறும் பெயர்.


cipher : சைஃபர்: சுழி : கணினி பாதுகாப்பாகத் தகவலைக் குறிப்பிட உதவும் இரகசிய முறை. CIPs: சிஐபிஎஸ் : Canadian Information Processing Society என்பதன் குறும் பெயர். circle : வட்டம் : ஒளிக்காட்சி முகப்பில் வட்டங்களை வரைவதற்கான பேசிக் / கியூபேசிக்கில் உள்ள ஒரு கட்டளை.

circuit : மின்சுற்று; மின் இணைப்பு : 1. மின்னணுக்களைக் கட்டுப்பாடான முறையில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதை.2. மின்சக்தி செல்லக்கூடிய கடத்திகள் மற்றும் அது தொடர்பான மின்சாதனங்களின் அமைப்பு. 3. இரண்டு அல்லது கூடுதல் இடங்களிடையே ஏற்படும் தகவல் தொடர்பு இணைப்பு. circuit analyzer : மின் சுற்று ஆய்வுப் பொறி : ஒரு மின்னணு மின் சுற்று செல்லத்தக்கதா என்று சோதித்துக் கூறும் சாதனம்.

circuit board : மின்சுற்று அட்டை : தொடர்ச்சியான நுண் சிப்புகளையும், பல்வேறு மின்னணுச் சாதனங்களையும் ஏற்றிப் பொருத்தக் கூடிய மின்சுற்று அட்டை (Circuit board)

அட்டை. அட்டையின் மேற்பரப்பில் மின்சுற்று அமைப்புகள் அச்சிடப் படுகின்றன. printed circuit board என்றும் அழைக்கப்படுகிறது.

circuit breaker: மின்சுற்று உடைப்பி: அதிக மின்னோட்டம் ஏற்படுவதை உணர்ந்து மின்சுற்றைத் துண்டிக்கும் பாதுகாப்புச்சாதனம். ஃப்யூஸ் போல்