பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clock spe 137 cluster


clock speed: கடிகார வேகம் : கணினியின் உட்பகுதி இதயத் துடிப்பு. ஒரு குவார்ட்ஸ் படிகத்தில் உருவாக்கப்படும் நிலையான அசைவுகளை கடிகார மின்சுற்று பயன்படுத்திக் கொண்டு மையச் செயலகத்திற்கு தொடர் துடிப்புகளை அனுப்புகிறது. வேகமான கடிகாரத் துடிப்பு உள் செயலாக்கத்தை வேகப்படுத்தும். சான்றாக, ஒரே செயலகம் 20 மெகா ஹெர்ட்சில் ஒடும்போது 10 மெகா ஹெர்ட்சில் ஒடுவதைவிட இரண்டு பங்கு வேகமாகச் செயல்படும்.

clock track : கடிகாரப் பாதை : காலத்தைக் குறிப்பதற்கான சமிக்ஞைகளைப் பதிவு செய்து வைத்திருக்கிற பாதை.

clockwise: கடிகார ஓட்டத்தில் : இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு நகர்தல்.

clone:போலி: ஒன்றின் நகல் அல்லது சரியான பிரதியாக இருக்கும் ஒரு பொருள் அல்லது கருத்து என்று உயிரியலுக்கு அப்பாற்பட்ட துறைகளை கூறலாம்.

close : மூடு : டிபேஸ், கிளிப்பர் போன்றவற்றில் முன்பே திறந்த கோப்பை மூடுவதற்கான கட்டளை. செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது வெளியேறி எல்லா திறந்த கோப்பு களையும் மூடுவதற்குப் பல மென்பொருள் பயன்பாடுகளில் உள்ள ஒரு கட்டளை. ஒரு கோப்பை சரிவர மூடத் தவறினால் தகவல் சிதைந்தோ அல்லது தொலைந்தோ போகும்.

closed architecture: மூடிய கட்டுமான அமைப்பு : கணினியில் கட்டுமான அமைப்பு அதன் தொழில் நுட்ப புள்ளிவிவரங்களை பொது மக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது.

close file : மூடப்பட்ட கோப்பு :


படிக்கவோ, எழுதவோ அணுக முடியாத கோப்பு.

close loop : மூடிய மாற்றுப் பாதை : முழுமையான வட்டமைப்பிலுள்ள மாற்றுப் பாதை.

closed shop: மூடிய அங்காடி : தகவல் செயலாக்க மையத்தை தொழில் முறையில் இயக்குபவர்களைக் கொண்டு இயக்குவது. ஆணைத் தொடர்களையும் தகவல்களையும் ஏவலாளர்கள் கொண்டு வருவார்கள் அல்லது தொலைபேசிக் கம்பிகளின் வழியாக அனுப்புவார்கள். இதன் மூலம் கணினி அறைக்குள் பயனாளர்கள் மிகவும் திறமையாக செயல் பட முடிகிறது.

closed subroutine.: மூடிய துணை வாலாயச் செயல்முறை : அழைக்கும் செயல்முறைகள் ஒன்று அல்லது பலவற்றுடன் இணைக்கப்பட்டு ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ள துணைச் செயல் முறை.

closed system : மூடிய அமைப்பு : அந்நிய முனையங்கள் அல்லது சாதனங்களுடன் இணைவதை ஏற்றுக் கொள்ளாத கணினி அமைப்பு.

cluster : தொகுதி : ஒரு கன்ட்ரோலர் மூலமாக பெரிய கணினி ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி முனையங்களின் ஒரு குழு. வட்டு பிரிவுகளில் (2 முதல் 16 வரை) ஒரே அலகாகக் கருதப்படுபவை. 30 கோப்பானது வட்டில் 2,048 எட்டியல் உள்ள தாக இருக்கலாம். ஆனால், வட்டு தொகுதியில் 512 எட்டியல் பிரிவுகள் இருக்கும்.

cluster controller: தொகுப்பு கட்டுப்பாட்டுச் சாதனம்: குறைந்த வேக சாதனங்கள் பலவற்றிலிருந்து தகவல்களைத் திரட்டும் அடிப்படைச் செய