பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதில் 'Memory' என்பதற்கு நினைவகம் 'நினைவுப் பதிப்பான் என்று சொற்பொருள் தந்து, அதனை விளக்கி 'ஏராளமான தகவல்களைச் சேமிக்கும் திறன் கொண்ட கணினி யின் சேமிப்பு வசதிகள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். 'Multimedia என்ற சொல்லுக்குப் பல் ஊடகம் என்று மொழி பெயர்ப்புச் செய்து 'ஒன்றுக்கு மேற்பட்ட படிவத்தில் தகவலைப் பரப்புதல்' என்று அதன் தன்மையை விளக்கி, 'சொற்கள், ஒலி, வரைகலை, உயிர்ப்பட வரைகலை, முழுநீள ஒளிக்காட்சி என்று அதன் செயல்வகையை விரித்துக் கூறி இருப்பது பாராட்டுக்குரியதாகும். 'Monitor என்பதற்கு 'திரையகம், செய்தி அறிவிப்பான்' என்று நல்ல தமிழ் சொற்களைப் பயன்படுத்தியுள்ளது எண்ணி மகிழத்தக்கது.

இந்நூலினால் கணினிக்கல்வியில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழாக்கம் செய்வதில், ஏற்கலாகும் தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தந்து, இடை யிடையே இலக்கிய வழக்குத் தமிழ்ச் சொற்களையும், செம்மையாக உரிய இடத்தில் பயன்படுத்தியுள்ளதுடன் ஒரு சில இடங்களில் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் கைக்கொண்டு பயன்படுத்தி உள்ளார். இதனால் ஆசிரியர் பலவித கோணங்களில் சொற்பொருளை விளக்கிட முயற்சித்து இருப்பதும், நடைமுறை பயன்பாட்டைக் குறிக் கொண்டு இருப்பதும் தெளிவாகிறது.

இவ்வரிய நூலில் கணினி உலகில் பயன்படுத்தும் அனைத்துச் சொற்களையும் அகரவரிசையில் இணைப்பதற் கென்று இதன் ஆசிரியர் அமெரிக்கா முதலான வெளி நாடுகளில் சில மாதங்கள் தங்கி இருந்து அங்குப் பயன்படுத்தப் படும் சொற்களையும் ஆய்ந்து, தொகுத்து உரிய பொருள் விளக்கமுடன் இடம்பெறத் செய்துள்ளதைக் காண்போர் ஆசிரியரின் இமாலய முயற்சியைப் பாராட்டாமலிரார்.

கடந்த 32 ஆண்டுகளாக உலகந்தழுவிய யுனெஸ்கோ அமைப்பின் வெளியீடான கூரியர் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றி வரும்

12