பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data lin

198

data mod


data line monitor : தகவல் பாதைத் திரையகம்: செய்தித் தொடர்புகளில், ஒரு செய்தித்தொடர்புப் பாதையில் குறியீடுகளையும், நேரத்தையும் பகுப்பாய்வு செய்கிற ஒரு வாசகக் கருவி. இது, செய்தி அனுப்புவதற்குத் தேவையான மென்பொருள்கள், வன்பொருள்கள் அனைத்தையும் குறிக்கும்.

data link: தகவல் இணைப்பு: செய்தி ஒன்றைத் தகவல் வடிவில் அனுப்ப அனுமதிக்கும் கருவி.

data link escape: தகவல் தொடர்புப் போக்கு வழி: அடுத்துவரும் எழுத்து, தகவல் இல்லை என்பதையும், ஒருகட்டுப்பாட்டுக் குறியீடு என்பதையும் குறிக்கின்ற செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு எழுத்து.

data logging : தகவலாக்கம் ; தகவல் பதிவு : ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்டிடம் எங்குமுள்ள பல்வேறு அறைகளிலுள்ள வெப்ப உணர்விகளிலிருந்து வரும் தகவல்களை திரும்பத் திரும்பப் பதிவு செய்கிறது. இந்தத் தகவல்கள் வெப்பமூட்டுவதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

data management: தகவல் நிர்வாகம்; தகவல் மேலாண்மை: கவன்பொருள் அமல்படுத்துதல், தகவல் சேமிப்பு மரபுகள், உள்ளீட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். 2. தகவல்களை முறைப்படுத்துதல், அட்டவணைப் படுத்துதல், இருக்குமிடம் அறிதல், பெறுதல், சேமித்தல், மற்றும் பராமரித்தல் ஆகிய பெரும் பணிகளைக் கொண்ட இயக்க முறைமை ஒன்றின் முக்கியப் பணிகள்.

data management system : தகவல் மேலாண்மை அமைப்பு ; தகவல் நிர்வாக முறைமை : 1. தகவல் முறைமைகளுக்குத் தேவைப்படும் தகவல்களைச் சேகரிக்க, முறைப்படுத்த, பராமரிக்கத் தேவைப்படும் ஆணைத் தொகுப்பு, நடைமுறைகளை வழங்கும் முறைமை. 2. நிறுவனம் ஒன்றிற்குத் தகவல் சேமிப்பு ஒன்றினை ஏற்படுத்தவும் பராமரிக்கவும், தகவல் உள்ளிடுகிற, ஒருங்கிணைக்கிற பொறுப்பினைவழங்கும் முறைமை.

data manipulation : தகவல்களில் திருத்தம் : மொழி ஆணைகள் மூலம் தகவல் அடிப்படை அல்லது தகவல் கோப்பு ஒன்றுடன் தகவல்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தியமைத்தல், பெறுதல் ஆகிய பணிகளைச் செய்யும் நடைமுறை.

data manipulation language, DML : தகவல் பராமரிப்பு மொழி; தகவல்களைத் திருத்தும் மொழி : ஆங்கில மொழி ஆணைகளைப் பயன்படுத்தி, கணினி ஒன்றின் தகவல் சேமிப்பு ஒன்றினை அணுகுதல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றுக்குப் பயனாளர் ஒருவரை அனுமதிக்கும் மொழி.

data matrix : தகவல் படிமம்; தகவல் அச்சுவார்ப்புரு : தகவல்களை நிரல்நிறைகளில் காட்டும் முறை.

data model: தகவல் படிமம்.

data modelling : தகவல் உருமாதிரி: தகவல் கூறுகளிடையிலான தொடர் புகளை அடையாளங் கண்டு, தகவல்