பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data str

203

data tra


 அனுப்பப்படும் தொடர் வரிசைத் தகவல்.

data structure : தகவல் அமைப்பு ; தகவல் கட்டமைவு : தகவல் அடிப்படை ஒன்றின் கோப்புகளுக்கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தகவல் வகைகளுக்கிடையிலான உறவு.

data switch : தகவல் விசை: ஒரு தொடரை இன்னொரு தொடருக்கு அனுப்புகிறவிசைப்பெட்டி. எடுத்துக் காட்டு : பன்முக அச்சடிப்பிகளை ஒரு கணினியுடன் இணைக்க அல்லது பன்முகக் கணினிகளை ஒரே அச்சடிப்பியுடன் இணைக்க இது பயன்படுகிறது. இதனைக் கையாலோ, தானியங்கு விசையினாலோ செய்யலாம்.

data tablet: தகவல் பலகை: வரைபட வெளியீட்டு விசைகளுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி.

data terminal : தகவல் முனையம்: கணினி முறைமை ஒன்றில் தகவல் தொடர்பு இணைப்பில் தகவல்களை உள்ளிட அல்லது பெற உதவும் முனையம்.

data terminal equipment : தகவல் முனையச் சாதனங்கள் : ஒரு முனையத்திலிருந்து தகவலை அனுப்புவதற்கு உதவுவதற்குத் தேவையான சாதனம். எடுத்துக்காட்டு : தகவல் வட்டு, தகவல் ஆதாரம்.

data terminator : தகவல் முடிவுறுத்தி: உட்பாட்டுத்தகவல்கள் முடிவுற்று விட்டன என்பதைக் குறித்துக் காட்டும் ஒரு தனிவகைத் தகவல் சாதனம். இதனைக் காவல் சாதனம் (Sentinal) அல்லது மோப்பச் சாதனம் (Trailer) என்றும் கூறுவர்.

data transfer: தகவல் மாற்றம் : கணினி அமைவுக்குள் தகவல்களை இட மாற்றம் செய்தல். செய்தித் தொடர்பு இணையத்தின் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தகவல்கள் ஆதாரத்தில் தானாக அழிக்கப்படுவதில்லை என்பதால், இட மாற்றம் என்பது உண்மையில் ஒரு படியெடுப்பு பணியேயாகும்.

data transfer operations : தகவல் செலுத்துச்செயல்முறைகள்; தகவல் அனுப்புகைச் செயல்கள் : தகவல் தொடர்பு வழியிலோ அல்லது கணினி ஒன்றின் சேமிப்புப் பகுதியிலோ, ஒரிடத்தில் உள்ளதை பிரதி செய்து மற்றொரு இடத்திற்கு மாறறுதல்.

data transparency : தகவல் மறைப்பின்மை : தகவல்கள் எந்த அமைவிடத்தில் இருந்தாலும் அல்லது அது எதற்குப் பயன்படுவதாக இருந்தாலும், அதனை எளிதில் அணுகுவதற்கான திறம்பாடு.

data transfer rate : தகவல் செலுத்து வீதம் : தகவல் அனுப்புகை வீதம் : கணினியின் முக்கிய நினைவிடத்திலிருந்து வட்டுக்கு அல்லது ஒரு கணினியின் நினைவிடத்திலிருந்து மற்றொரு கணினியின் நினைவிடத் துக்குத் தகவல்களை அனுப்பும் வேக வீதம்.

data transmission : தகவல் அனுப்புகை: தகவல்செலுத்துகை: முறைமை ஒன்றின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு, தகவல்களை அனுப்புதல்.

data transmission channels: தகவல் அனுப்பீட்டு வழிகள்: தகவல் அனுப்பீட்டு வழிகள் அல்லது 'பெருவழிகள் என்பவை, ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற் குத் தகவல்களைக் கொண்டு செல்