பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாராட்டுரை

15ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் தோன்றியபோது ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலிருந்த பல மொழிகள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால் வழக்கொழிந்து போயின. அதேபோல் 20ஆம் நூற்றாண்டில் உலகெங்கிலும் வேகமாகப் பரவிவரும் கணினியைப் பயன்படுத்திக் கொள்ளாத மொழிகள் பின்தங்கிவிடக் கூடிய நிலை உருவாகியுள்ளது. ரோமன் எழுத்துகளை அடிப்படை யாகக் கொண்ட மொழிகள் கணினியில் எளிதாகவும் வேகமாகவும் பயன்படுத்தப்பட்ட பிறகு சீன, ஜப்பானிய, கொரிய, அரேபிய மொழிகள் இன்று பெரும் அளவுக்கு ஒருமித்த வகையில் செயல்பட்டு வருகின்றன.

கணினியிலும் இணையத்திலும் தமிழை எளிதாகப் பயன்படுத்த வேண்டி ஒருமிக்கப்பட்ட குறிக்கோடுகள் இந்த ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஊக்குவிப்பால் உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கில மொழியின் அடிப்படையிலேயே வளர்ந்துவிட்ட கணினி உலகம் பல்லாயிரக்கணக்கான புதிய சொற்களையும், சொற்றொடர்களையும், குறுஞ்சொற்களையும் உருவாக்கியுள்ளது. கணினியில் தமிழ் ஈடுபட்டாலும் அது முழுமையாகச் செயல்படுவதற்கு மிகவும் இன்றியமையாதது கணியத் தமிழ் அகராதி ஆகும்.

ஒரு சிலர் கணியத் தமிழ் அகராதிகளை உருவாக்க முயன்று சில நூறு சொற்களை மட்டும் திருப்திகரமாக மொழி பெயர்ப்பதில் வெற்றி கண்டனர். கணினித் தொடர்புடைய ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவதில் ஏற்படும் சொல்லாக்கச் சிக்கல்களும், பொருட்சிதைவும், புதிய சொற்களை உருவாக்குவதில் உள்ள சிரமங்களும் கருதி பலரும் இம்முயற்சியில் ஈடுபடத் தயங்கினர். இந்நிலைமையில்

21