பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enquiry

enquiry character :விசாரணை எழுத்து: செய்தித்தொடர்புகளில் உள்ள ஒரு கட்டுப்பாட்டு எழுத்து. இது ஏற்பு நிலையத்திலிருந்து ஒரு பதிலை வேண்டுகிறது.

enter key : நுழைவு விசை நுழைவு சாவி, உள்ளிட்டு பொத்தான்; நுழைவு (செலுத்து) விரற்கட்டை: சில விசைப் பலகைகளில் உள்ள சிறப்பு விசை. இதனை அழுத்தினால் ஒரு ஆணையைச் செயல்படுத்துவது என்று பொருள். சில விசைப்பலகைகளில் உள்ள Return விசை போன்றது. Carriage Return உடன் மாற்றாக இதைப் பயன்படுத்தலாம்.

enternal sort : புறநிலைப்பகுப்பி : குழுமம் முழுவதும் மிகப்பெரிதாக இருக்கும்போது, பகுக்கப்பட்ட இனங்களின் இடைநிலைக் குழுமங்களைச் சேமித்துவைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு புறச்சேமிப்புச் சாதனம் உள்ள ஒரு பகுப்பி.

enterprise data: தொழில்முனைவுத் தகவல்: அமைவனம் முழுவதிலு முள்ள பல பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளும் மையப்படுத்திய தகவல்கள்.

entity: உட்பொருள்: ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு உட்பொருளைக் கொண்டுள்ள ஒரு பொருள்.

entity type : உட்பொருள் வகை: ஒரு தகவல் தளத்தில் உள்ள ஒரு வகைக் கோப்பு. எடுத்துக்காட்டு: வாடிக்கையாளர் கோப்பு ; உற்பத்திப் பொருள் கோப்பு.

entropy : செறிவளவு : தகவல் செறி வாக்கத்தில், ஒரு பொருளிலுள்ள மிகையில்லாத, செறிவாக்கம் செய்ய முடியாத தகவல்களின் அளவு.

entry: நுழைவு; உள்ளிடு: மின்னணு

264

environment

விரிதாளில், ஒரு குறிப்பிட்ட அறையில் உள்ள தகவல் அல்லது மதிப்பு.

entry point: நுழைவுப் பகுதி ; நுழைவிடம்: ஒரு வழக்கச் செயலின் பகுதி. வேறொரு வழக்கச்செயலில் இருந்து இதற்கு கட்டுப்பாடு அனுப்பப்படும். மாற்றல் முகவரி என்றும் குறிப்பிடப்படும். ஆணைத்தொடரில் முதலில் செயல்படுத்தப்படும் ஆணை.

enumerate : கணக்கீடு : ஒன்றன்பின் ஒன்றாகக் கணக்கிடுதல் அல்லது பட்டியலிடுதல். கணக்கிட்ட தகவல் வகையானது, ஒரு மாறியல் மதிப்புரு வின் நிகழ்தகவு மதிப்பளவுகள் அனைத்தின் ஒரு பட்டியலை வரை யறுக்கிறது.

enumeration : கணக்கிடுதல் : முறையாக உருவாக்கிய ஒரு பட்டியல்.

envelope : உறையீடு : ஒரு குறிப் பிட்ட செயற்பாட்டின் அதிர்வெண்களின் வீச்செல்லை. தனியொரு அலகாகத் தொகுக்கப்பட்டுக் கையாளப்படும் துணுக்குகளின் அல்லது இனங்களின் குழுமம்.

environment : சூழ்நிலை ; சூழல் : கணினிப் பின்னணியில் நேரப்பங்கீட்டுச் சூழ்நிலை போன்ற இயக்க முறையைக் குறிப்பிடுகிறது. வெப்ப நிலை, ஈரப்பதம் போன்றவற்றை இது அவ்வளவாகக் குறிப்பிடுவதில்லை. ஆனால், இரண்டு வகையான சூழ்நிலையும் கணினி இயக்கத்தின் திறனைப் பாதிக்கக்கூடியவை.

environment division : சூழல் பகுதி : கோபால் ஆணைத் தொடரின் நான்கு பகுதிகளில் இரண்டாவது பகுதி.

environment variable: சூழல் மாறியல் மதிப்புரு : DOS சூழல் இடைவெளியிலுள்ள எழுத்துகளின் ஒரு குழுமம்.