பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

EOB

இதற்கு ஒரு மதிப்பளவு குறித்தளிக்கப்படுகிறது.

EOB : இஓபி  : End of Block என்பதன் குறும்பெயர்.

EOF : இஓஎப் : End Of File என்பதன் குறும்பெயர். ஒரு கோப்பில் உள்ள எல்லா பதிவேடுகளும் செயலாக்கம் செய்யப்பட்டுவிட்டபின், கோப்பின் இறுதி நிலையை கணினி அடைந்து விட்டதாகப் பொருள்.

EOJ: இஓஜே : End of Job என்பதன் குறும்பெயர்.

EOLN : இஓஎல்என் : End of line என்பதன் குறும்பெயர். ஒருவரியில் உள்ள தகவல்கள் முடிவதைக் குறிப்பிடும் கொடி. EOL என்றும் சில சமயம் சுருக்கப்படும்.

EOM : இஓஎம் : end of message என்பதன் குறும்பெயர்.

EOT : இஓடி : End of Transmission என்பதன் குறும்பெயர்.

EPO: இபிஓ (அவசர மின் துண்டிப்பு): Emergency Power off என்பதன் குறும்பெயர். அவசரநிலையில் மின்சுற்றும் அதனை இயக்கும் பொத்தான்களும் முழு கணினியையும் நிறுத்திவிடக்கூடும். ஒரு பெரிய கணினி அமைப்பில் இருபதுவரையிலான இபிஓ பித்தான்கள் இருக்கக்கூடும்.

EPROM : இப்ரோம்: அழித்தெழுது படிப்பு நினைவகம்: Erasable Programmable Read Only Memory என்பதன் குறும்பெயர். அதிக அடர்த்தியுள்ள அல்ட்ராவயலட் ஒளியில் அழித்து மீண்டும் ஆணைத்தொடர் அமைக்கக் கூடிய சிறப்பு புரோம் (PROM)

EPROM eraser : இப்ரோம் அழிப்பி : எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பியில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு

265

equalization

செயல்முறையை அழிப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு ROM சிப்புகள் ஏற்றிவைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம்.

EPROM programmer : இப்ரோம் ஆணைத்தொடர் : இப்ராம் (EPROM) சிப்புகளுக்கு ஆணைத்தொடர் அளிக்கப் பயன்படும் சிறப்பு எந்திரம்.

EPSILON: இப்சிலான்: ஒன்றின் சிறிய அளவு.

EPSON: இப்சன்: வரைகலையையும் வாசகங்களையும் அச்சிடக்கூடிய ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் அச்சடிப்பி.

EPSON printer : இப்சன் அச்சடிப்பி : ஜப்பானிலுள்ள இப்சன் கழகம் என்ற அமைவனம் தயாரிக்கும் உலகப் புகழ்பெற்ற அச்சடிப்பி வகை. இது புள்ளிக்குறி வார்ப்புரு அச்சடிப்பிகளையும், மைதூவு அச்சடிப்பிகளையும் லேசர் அச்சடிப்பிகளையும் தயாரிக்கிறது.

epson emulation: இப்சன் முன்மாதிரி : ஒத்தியல்பு இப்சன் புள்ளிக்குறி வார்ப்புரு அச்சடிப்பிகள். இப்சன் Mx, Rx, Fx, அச்சடிப்பிகளிலுள்ள ஆணைத் தொகுதி, ஒரு தொழில் துறைத்தர அளவாக உருவாகியுள்ளது.

equality: சமம்; சமத்துவநிலை:சமன்பாடு குறியீட்டினால் உணர்த்தும் கருத்து. பல ஆணைத்தொடர்மொழிகளிலும், வடிவமைப்புகளிலும் பயன்படுத்தப்படுவது. மாற்றாக அமைக்கப்படும் குறியீடாகவும் சமன்பாடு குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

equalization: சரிநிகராக்கம்: உருத்திரிபினைக் குறைத்து, நெடுந்தொலைவுகளில் சைகை இழப்பீட்டை ஈடுசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் உத்திகள்.