பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

equation

equation : சமன்பாடு : ஒரே எண்ணைக் குறிப்பிடும் இரண்டு கணித வெளியீடுகளுக்கிடையில் சமன்பாடு குறியீட்டைப் பயன்படுத்தும் கணிதச் சொற்றொடர். A யுடன் 10 சேர்த்தால் 6 என்ற சமன்பாட்டில் A யின் மதிப்பு 4 ஆகும்.

equal priority:சம முன்னுரிமை

equipment : ஒரு கணினி அமைப்பின்பகுதி.

equipment bay : கருவி இருப்பிடம் : மின்னணுக் கருவி பொருத்தப்படுகின்ற பெட்டி அல்லது அலமாரி.

erasable: அழிக்கவல்ல.

erasable storage : அழிக்கக்கூடிய சேமிப்பகம் : அழிக்கக்கூடிய தேக்ககம்: அழித்து மீண்டும் பயன்படுத்தக் கூடிய சேமிப்பு ஊடகம். காந்த வட்டு, உருளை, நாடா போன்ற ஊடகங்களை அழித்து மீண்டும் பயன்படுத்தலாம். துளையிடப்பட்ட அட்டைகள் அல்லது காகிதநாடாக்களை இவ்வாறு செய்யமுடியாது.

erase:அழி: மீண்டும் வேறொன்றை வைக்காமல் தகவல்களை சேமிப் பகத்திலிருந்து நீக்குதல்.

erase head:அழிக்கும் முனை: வீட்டு உபயோக, நாடாப்பதிவு கருவியில் புதிய செய்தியினைப் பதிவு செய்யும் முன்பு நாடாவில் ஏற்கனவே பதிவு செய்ததை அழிக்கும் முனை. மையம் இல்லாத காந்த மயப்பட்ட பெரிக் அமில மேற்பரப்புகளான நாடா, அட்டை அல்லது வட்டில் அழிக்கும் முனையானது எழுதும் முனை அத்தகைய செயலைச் செய்யும் முன்பு அழித்துவிடும்.

ergonomics : சூழலியல் : மனிதர்களுக்கும் அவர்களது பணிச்சூழலுக்கும் இடையிலுள்ள பருப்பொருள்

266

error

உறவை ஆராய்தல். அதிகத்திறன், நல்ல உடல்நலம் போன்ற பொது நலனுக்காக இயக்குபவர்களின் வசதிக்காக எந்திரங்களை மாற்றுதல். விசைப்பலகைகளில் உள்ள எண் விசைகள் பிரிக்கக்கூடிய விசைப்பலகைகள், தலைப்பு காட்டும் திரை போன்றவை இது தொடர்பான நல்ல முடிவுகள்.

erlang : எர்லாங்க் : ஓர் தொலை பேசிப் பொறியமைவில் மொத்தத் திறம் பாட்டினை அல்லது சராசரிப் பயன்பாட்டினை குறித்துரைக்கிற போக்குவரத்துப்பயன்பாட்டு அலகு. ஒர் 'எர்லாங்க்' என்பது ஒரு தொலைபேசி இணைப்பின் தொடர்ச்சியான பயன்பாட்டுக்குச் சமம். அனைத்து இணைப்புகளின் இயங்கு நேரங்களின் கூட்டுத் தொகையினை அளவீட்டுக் கால அளவினால் வகுத்துக் கிடைக்கும் ஈவுதான் எர்லாங்க் அலகுகளின் போக்குவரத்து அலகாகும்.

EROM : இரோம் : Erasable Read Only Memory என்பதன் குறும்பெயர்.

error: பிழை;தவறு:கணினி அல்லது சரியானதை அளந்த தன்மை அல்லது உண்மை மதிப்பிலிருந்து விலகிச்செல்வது. fault, malfunction, mistake இவைகளுடன் வேறுபடுத்துக.

error analysis : பிழை ஆய்வு ; பிழை பகுப்பாய்வு: எண்முறை ஆய்வு நடைமுறைகளில் பிழையின் பங்கை ஆராயும் எண் ஆய்வு தொடர்பான துறை. கணிப்பு கணிதத்தின் வினோதத் தன்மை காரணமாக கணிப்பில் ஏற்படும் பிழைகளை ஆராய்வதையும் குறிப்பிடுகிறது.

error checking: பிழை சோதித்தல் : 1. தகவல்களின் செல்லத்தக்க நிலையைச் சோதிப்பதற்கான பல்வேறு