பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மிகப் பெரிய கட்டிடத்தில் நிறுவப்பட்ட அக்கணினி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டது.

அதன்பிறகு பரவலாக விற்பனைக்கு வந்த கணினிகளும் பல நூறுபேர் ஒரே நேரத்தில் பணியாற்றக் கூடிய பெருமுகக் கணினிகள் (Main Frames) ஆகும். இவற்றை மிகப்பெரிய வணிக நிறுவனங்களே வாங்கிப் பயன்படுத்த முடிந்தன. அடுத்து, நடுத்தர நிறுவனங்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் அதைவிடச் சிறிய (Mini) கணினிகள் விற்பனைக்கு வந்தன. 1971ஆம் ஆண்டில் நுண்செயலி (Micro processor) கண்டுபிடிக்கப் பட்டபின், கணினியின் வளர்ச்சிப் படியில் திடீர்த் தாவல் ஏற்பட்டது.

1977ஆம் ஆண்டில் விலைகுறைந்த மிகச் சிறிய (Micro) ஆப்பிள்-I கணினிகள் பெருமளவில் விற்பனைக்கு வந்தன. நிறுவனங்கள் மட்டுமே கணினியை நிறுவமுடியும் என்ற நிலைமாறி, தனியார் ஒருவர் தன் சொந்தப் பயன்பாட்டுக்காக ஒரு கணினியை வாங்க முடிந்தது. எனவே அக்கணினி சொந்தக் &6$fløsfl (Personal Computer-PC) 6TsirpsNy55úul_l_S. 1980-Yub ஆண்டில் மிக எளிதாகப் பயன்படுத்தக் கூடிய சொந்தக் கணினிகளை ஐபிஎம் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவந்த பின் உலகெங்கிலும் கணினியின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. நுண்செயலி மற்றும் நினைவகச் சிப்புகளின் உற்பத்தியில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம், காட்சித் திரை, விசைப் பலகை, அச்சுப்பொறி போன்ற துணைச் சாதன உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி, மனிதனின் அன்றாடப் பணிகளை எளிமைப்படுத்தும் ஏராளமான மென்பொருள் தொகுப்புகளின் உருவாக்கம் காரணமாக, கணினித் துறையில் அதிகமாகப் பரிச்சயம் இல்லாதவர்களும் கணினியில் பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

நிறுவனங்கள் தத்தம் அலுவலகங்களில் பயன்படுத்தி வந்த தனித்த கணினிகளை நன்றாகப் பிணைத்து, கணினிப் பிணையங்கள் (Computer Networks) உருவாக்கப்பட்டன. ஒரே அலுவலகத்தில் (Local Area), ஒரு பெருநகரில் (Metro Area) மற்றும் நாடு முழுவதிலுமுள்ள (Wide Area) கிளைகளிலுள்ள கணினிகளை ஒருங்கிணைத்துப் பிணையங்கள் உருவாயின. தகவல் மற்றும் மூலாதாரங்களைப் பகிர்ந்து கொள்வது இதன்மூலம் சாத்தியமானது. அரசுத் துறையினர், பல்கலைக் கழகங்கள், பொதுநூலகங்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், வங்கிகள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்கள் தத்தம் செயல்பாடுகளுக்காக உருவாக்கிய குறும்பரப்பு/விரிபரப்புப் பிணையங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டன.

26