பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்நுட்ப அறிவியலின் ஒரு துறையாக வளர்ச்சி பெற்று, இன்றைக்கு எந்தவொரு அறிவியல் துறையையும் அணுகி ஆய்வுசெய்ய உதவும் ஒரு கருவியாகப் பரிணமித்துள்ளது. எந்த அறிவியல் பாடத்தைக் கற்பவராயினும், எந்தத் தொழில் நுட்பத் துறையில் பயில்பவராயினும் கணினி அறிவியலையும் கற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயத் தேவையாகி விட்டது.

தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பம்

தமிழ்நாட்டின் சின்னஞ்சிற்றுார்களில் மூலை முடுக்கு களில் - எல்லாம் கணினி கற்றுத் தரும் பயிற்சி மையங்கள் ஏராளமாய்ப் பெருகிவிட்டன. மாணவர்கள் மட்டுமின்றி சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் கணினியில் பயிற்சி பெற ஆர்வம் காட்டுகின்றனர். கணினியை இயக்கத் தெரிந் தாலே நல்ல வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மென்பொருள் உருவாக்கத்தில் உலகிலேயே இந்தியா முன்னணி இடம் வகிக்கிறது. அதில் தமிழ்நாட்டு இளைஞர் களின் பங்கு கணிசமானது. உலகின் அனைத்து முன்னணிக் கணினி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் கணினி அறிவியலைத் தேர்வுசெய்து விரும்பிப் படிக்கின்றனர்.

பத்திரிகைகளில், வானொலியில், தொலைக்காட்சியில் நாள்தோறும் கணினித்துறை சார்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் கணினி விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகமாகவே உள்ளது.

அச்சுத் துறையில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ். அதுபோலவே இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ்தான். தமிழுக்கென்றே தமிழில் 13,000 இணையத் தளங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மொழி களிலேயே கணினிக்கென்று தனியாகப் பத்திரிகை வெளிவந்தது தமிழ்மொழியில்தான். கணினி அறிவியல் தொடர்பான ஏராளமான புத்தகங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.

கணினித் திரைகளில் தமிழ்மொழி உலாவந்து கொண்டிருக்கிறது. உரைத் தொகுப்பான்கள் (Text Editor), சொல்செயலிகள் (Word Processor), தகவல்தள மேலாண்மை (Data Base Management), இ-மெயில் (E-Mail), இணைய உலாவி (Browser), கணக்கியல் தொகுப்புகள் (Account Packages), குழந்தைகள், மாணவர்கட்குப் பயன்படும் பாடங்கள், வெளி

29