பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G

G : ஜி : 'ஜிகா' என்பதன் குறியீடு. ஜிகா என்பது ஏறத்தாழ நூறு கோடி. கணினியில் இதன் மதிப்பு 1,073, 741,324, (230) ஆகும் ; வழக்கமான 1,000,000,000 அன்று. இது - ஐ விட அதிகம் எனப் பொருள்படும்"Greater than" என்பதன் சுருக்கக் குறியீடு. gage array: susploissos.

gain : ஆதாயம் ; பெருக்கம் : ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சமிக்ஞைகளை அனுப்பும்போது பெருக்கிகள் மூலம் மின்சக்தி அல் லது சமிக்ஞையின்சக்தி அதிகரித்தல். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போகும் டெசிபல் முறையில் ஆதா யத்தின் அளவு கூறப்படும். gallium aresenide : G&6Sluib &yii செனைடு:உயர்நிலை அரைக்கடத்தி களை உருவாக்கப் பயன்படும் படிகப்பொருள். சிலிக்கானை விட உயர்ந்தது. ஆனால் அதிகம் செலவா கக் கூடியது. game pack:விளையாட்டுத்தொகுதி: ஒரு கணினியில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டினை இயக்குவதற்கான ஓர் ஆயத்தச் செயல்முறை. games theory: solo)&must (Sã G3s) றம்;விளையாட்டுக்கொள்கை;விளை யாட்டுக் கோட்பாடு : நிகழ் தகவு (Probability) தொடர்பான கணிதவிய லின் ஒரு பிரிவு. ஒரு விளையாட்டுத் தந்திரத்தைக் கொண்டிருக்கிற ஒர் எதிராளியை எதிர்கொள்வதற்குப் பெரிதும் உகந்த ஒர் தந்திரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கணிதச் செய் முறை. இந்தச் சொல்லை 1928இல் முதன்முதலாக ஜான் வான் நியூமென் பயன்படுத்தினார். கணினி வரை கலை யில் கண்ணுக்கு ஒரே மாதிரி யாகப் புலனாகக் கூடிய பல்வேறு

garbage

செறிவுகளைத் தரக்கூடிய ஒரு சூத்திரம். gamut:வண்ணக்களம்: கணினிகாட் சித் திரையில் காட்டக்கூடிய மொத்த வண்ணங்களின் வரிசை.

gang punch : (50p globem : 3) coast யிடும் அட்டைகளின் குழுவில் உள்ள அனைத்து அட்டைகளுக்கும் ஒரே மாதிரியான அல்லது நிலையான தக வலைத் துளையிடுவது.

gantt chart:(336ũTL6usoTuLth : Lamil கள்அல்லது நடவடிக்கைகளின் ஆரம் பம் மற்றும் முடிவு முனைகளைக் குறிப்பிட நேர அடிப்படையில் பட்டைக் கோடு அல்லது அம்புக்குறி மூலம் குறிப்பிடும் வரைபடம். ஒரு திட்டத்தின் குறிப்பிட்ட காலக்கெடு அல்லது சாதனைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. gap . இடைவெளி : கோப்பு இடை வெளிபோல் அல்லாது இரண்டு பதி வேடுகள் அல்லது தகவல் தொகுதி களுக்கு இடையிலுள்ள மின்காந்த நினைவக இடைவெளியைக் குறிப் பிடுவது. gapless : இடைவெளியின்மை : ஒரு தொடர்ச்சியான விசையோட்டத்தில் இடைத்தடை இடைவெளிகள் இல் லாமல் பதிவு செய்யக்கூடிய காந்த நாடா.

garbage . குப்பை : 1. தகவல் நுழை வின் தவறுகள் அல்லது கணினி ஆணைத்தொடரின் பிழைகள் அல் லது எந்திரக் கோளாறு போன்றவற் றின் காரணமாக கணினி ஆணைத் தொடரின் மூலம் ஏற்படும் சரியல் லாத விடைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படும் சொல். 2. இருப்பகத் திற்குக் கொண்டு செல்லப்படும் தேவையற்றதும், பொருளற்றதுமான தகவல்கள்.