பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ghost 316

ghost : நிழலுருவம் : 1. ஒரு கண் காட்சியில் அல்லது அச்சுப்பதிப்பில் அடிப்படை உருக்காட்சிக்கு நெருக்க மாகத் தோன்றுகிற மங்கலான இரண்டாவது உருக்காட்சி. கண் காட்சியில், இது பாஸ்ஃபோர்காரண மாக உண்டாகிறது. அனுப்பீட்டில், இரண்டாம் நிலைக் குறியீடுகளின் விளைவாக ஏற்படுகிறது. அச்சுப் படியில், காகிதம் நகரும்போது அச் சுக்கூறுகள்குறிப்பதால் உண்டாகிறது. 2. மங்கலான அச்செழுத்து முகப்பில், ஒரு பட்டியல் தெரிவினைக் காட்சி யாகக் காட்டுதல். இது தற்சமயத்தில் தேர்ந்தெடுக்கத் தக்கதன்று என்ப தைச் சுட்டிக்காட்டுகிறது. gibberish : பயனிலாத் தகவல் , தேவையற்ற தகவல். GIF ஜிஐஎஃப் (வரைகலைப் பரி மாற்ற உருவமைவு): 'கம்ப்யூசெர்வ்' எனப்படும் அமைவனம் உருவாக் கிய 'ராஸ்டர்' வரைகலைக் கோப்பு உருவமைவு. இது, 8 துண்மி வண்ணங்களை (256 வண்ணங் களை) கையாளக்கூடியது. ஏறத்தாழ 1.5:1அழுத்த விகிதங்களை 2:1 விகித அளவுக்குப் பெறுவதற்கு இது LZW முறையைப் பயன்படுத்துகிறது. giga:கிகா 10:1 பில்லியன் அல்லது 10இன் 9 மடங்கு. ஜி என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. gigabit : Śląs 56tailbl: 1,000,000,000 gjsiruốlssit. @geoan Gb, Gbit, G-bit, எனறும கூறுவா.

gigabyte கிகா எட்டியல் 1,000,000,000 எட்டியல்கள். இன்னும் துல்லியமாகக் கூறுவதாயின் 1,073,741,324 எட்டியல்கள். இதனை GB என்றும் கூறுவர் gigaflops : கிகாஃபிளாப்ஸ் (வினா டிக்கு கிகா மிதவைப் புள்ளிச் செயற்

global

பாடுகள்) ஒரு வினாடிக்கு 1,000,000,000 பதின்மப் புள்ளிச் செயற்பாடுகள். gigahertz : ślasm @$pitLco : @(5 நொடியில் ஒரு பில்லியன் தடவை கள். GHz என்று சுருக்கி அழைக்கப் படுகிறது. மின்காந்த அலைகளின் வரிசையை அளக்கப் பயன்படுத்தப் படும் அலகு. GIG0: (குப்பையிடக்குப்பை வரும்): Garbage in Garbage out arcăug air குறும்பெயர்.

glare: பிரதிபலிப்பு:கூசுதல்;கூசொளி: ஒரு காட்சித் திரையின் மேற்பரப்பி லிருந்து வரும் பிரதிபலிப்பு. glare filter:கூசொளி வடிகட்டி: மேல் நிலை மற்றும் சுற்றுப்புற ஒளியின் கூசொளியைக் குறைப்பதற்கு CRT திரையின் மீது பொருத்தப்படும் ஒரு நுண்ணிய வலைப் பின்னல் திரை. glitch : கோளாறு தடுமாற்றம் : வன் பொருளில் ஏற்படும் தற்காலிக அல்லது எதேச்சையான கோளாறு பற்றி குறிப்பிடும் பிரபல சொல். கூடுதல் மின்சக்தி மூலமும் இது ஏற்படுவதுண்டு. Sang அல்லது snarl என்றும் அழைக்கப்படுவதுண்டு. Error என்பதற்கு மாறானது.

global : உலகளாவிய, முழுதளாவிய, முழுமையான : 1. உள்ளுர் அளவில் என்று சொல்வதற்கு மாறாக மிகப் பரந்த எல்லை என்பதைக் குறிக்கும் பொதுச்சொல். 2. முதன்மை ஆணைத் தொடர் மற்றும் அனைத்து துணைவாலாயங்களையும் அணுகக் கூடிய மாறியின் பெயர் பற்றியது.

global character : (p(upāsmissolu

எழுத்து முழுமையான எழுத்துரு : தேடும் வாலாயத்தில் எந்த எழுத்

தினையும் சார்ந்து நிற்கும் எழுத்து