பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டில் வாழும் மக்கள் தமிழ் கற்றுக் கொள்ள உதவும் தொகுப்பு, பல்லூடக விளையாட்டுகள் (Multimedia Games) இன்னும் இவைபோன்ற மென்பொருள் தொகுப்புகள் தமிழ் மொழியிலேயே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படிப் பட்ட காலகட்டத்தில்தான் நான்காம் தமிழாகிய அறிவியல் தமிழின் ஓர் அங்கமான 'கணினித் தமிழ் செழுமைபெற்று வளரத் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கணினி அறிவியல் வளர்ந்த வேகத்தில் கணினித் தமிழ் வளரவில்லை என்றே கூற f வேண்டும்.

பேச்சுத் தமிழில் நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் என்றெல்லாம் வழங்கப்படுவதுபோல கணியத் தமிழும் ஊருக்கு ஒரு வடிவம், நாட்டுக்கு ஒரு வடிவம் என ஆகிவிடுமோ என அஞ்சவேண்டியுள்ளது. அறிவியல் என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. அதுபோலக் கணியத் தமிழும் தமிழ்பேசும் சமுதாயம் எங்கும் ஒன்றுபோல் பயன்படுத்தப்பட வேண்டும். கணினித் தமிழ்ச் சொல்லாக்கம் தரப்படுத்தப்பட்டு, கணினித் துறைக்கான கலைச்சொல் களஞ்சியம் தொகுக்கப் பட்டு வெளியிடப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் அதற்கான திசைவழியில் அரசோ, பல்கலைக் கழகங்களோ, தமிழ்ச் சங்க அமைப்புகளோ போதுமான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். இப்படிப்பட்ட காலகட்டத்தில், ஒரு தனியாளாய் நின்று, இம்மாபெரும் கடமையைத் தோளில் சுமந்து, தொலைநோக்குப் பார்வையோடு, திரு மணவை முஸ்தபா அவர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ள இக்கலைச் சொல் களஞ்சிய அகராதியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழக அரசின் முன்முயற்சிகள்

தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனைகள் புரிய இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் முன்முயற்சி எடுத்து வருகின்றன. தமிழ்நாடும் வேறெந்த மாநிலத்துக்கும் சளைத்ததில்லை என்பதைக் காட்டும் வகையில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறார்கள். * தகவல் தொழில்நுட்பத் துறை அமைக்கப்பட்டு, ஒர்ஐஏஎஸ் அதிகாரி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.