பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hypercube

டெவலப்மென்ட் அசோசியேஷன்" தயாரித்துள்ள இந்தச் சாதனம், மெக் கின்டோஷ் வரைகலை அட்டைப் பணித்திறனைச் சோதனை செய் கிறது. hypercube topology: 16.606 & 5681&g|7 அமைவிடம் : பன்முக நுண் செயலி களைப் பயன்படுத்தும் பேரளவு ஒருபோகு செய்முறைப்படுத்தும் மீமிகைக் கணினிகளுக்காக அண்மை யில் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைவு. - hyper - access : [blood, e.g.),656) : 'ஹில்கிரேவ்" என்ற அமைவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி (PC) செய்தித்தொடர்புச் செயல்முறை. இது தகவல் செறிவாக்கத்தை அளிக் கிறது. தனக்கென ஒரு வரிவடிவ மொழியை உடையது. இது, ஏராள மான முனையங்களுக்கும், தகவல் தொடர்பு நெறிமுறைகளுக்கும் உதவு கிறது. hyperCard : மிகைத் திறன் அட்டை : 'ஆப்பிள்' (Apple) என்ற கணினி அமைவனம் தயாரித்துள்ள பயன் பாட்டு மேம்பாட்டுப் பொறிய மைவு. இது, மெக்கின்டோஷ் மற்றும் ஆப்பிள்il GSஇல் செயல்படு கிறது. மிக முற்போக்கான ஒருங் கிணைந்த கூறுகளின் ஒரு தொகுதியை அளிக்கிறது. ஒரு தகவல் தளப் பொறியமைவு என்ற முறை யில், தகவல்களையும், வாசகங்களை யும், வரை கலைகளையும் இருத்தி வைத்துக் கொள்ளக்கூடிய அட்டை அடுக்குகளின் வடிவில் கோப்புகளை உருவாக்க இது பயனாளருக்கு உதவு கிறது. ஒரு கட்டுப்பாட்டுப் பொறி யமைவு என்ற முறையில், பயன்பாடு களைத் தொடங்குவதற்கான முதன் மைப் பட்டியலாக இது பயன்படு கிறது. CD ROM, ஒளிப் பேழை வட்டு

348

HyperScr

போன்ற பன்முகச் செய்தித் தொடர் புச்சாதனங்களை இது கட்டுப்படுத்து கிறது. கல்விப் பயன்பாடுகள் உரு வாக்கத்துக்கு உதவுகிறது. hypercube : மிகைக் கனசதுரம் : ஈரி லக்கப் பன்முகக் கணினிகளினா லான (4,8,16 முதலியன) ஒருபோகு செய்முறைப்படுத்தும் கட்டமைவு. இதில் தகவல்கள் மிகக் குறைந்த அளவு பயணஞ்செய்கிற வகையில் கணினிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. எடுத் துக்காட்டு : இரு 8-மைய முனைக் கனசதுரங்களில், கன சதுரத்திலுள்ள ஒவ்வொரு மைய முனையையும் மற் றொன்றிலுள்ள அதற்கு நேரிணை யான மைய முனையுடன் இணைக்க 6n) fTLO.

hyper media : 1660&# Qg5ml fill ஊடகங்கள் : ஒரு மிகையுரை முறை மையில் தகவல், உரை, வரை கலை, ஒளிப்படம், நகல் படம், ஒலி ஆகிய வற்றைக் கூறுகளாகப் பயன்படுத்து தல். பல்வேறு தகவல் வடிவங்கள் அனைத்தும், பயனாளர் ஒன்றி லிருந்து மற்றொன்றுக்கு எளிதாகச் சென்றிடும் வகையில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. hyperPAD: மிகைத் திண்டு : 'பிரைட் பில்-ராபர்ட்ஸ் - கம்பெனி' என்ற அமைவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான (PC) பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு. இது மிகை அட்டை போன்ற செயல் முறை. இது உரை வடிவமுறையில் செயற்படுகிறது. இதில், PAD உரை வரி வடிவ மொழி உள்ளடங்கி யுள்ளது. Hyperscript : மிகை வரிவடிவம் : "WINGE" விரிதாள் தொகுப்புடன் வழங்கப்படும் ஒரு முன்னேறிய பெரும (வரிவடிவ) மொழி.