பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தருவதனால், வருங்காலச் சமுதாயம் பொருத்தமான ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளட்டுமே' என்று திறந்த மனத்துடன் கூறுவார்.

+ கூடுமானவரை புழக்கத்தில் உள்ள நல்ல தமிழ்ச் சொற்களையே எடுத்தாள்கிறார். வடமொழிச் சொற்களைத் தவிர்க்கிறார்.

Jaggies - பிசிறுகள் Pad - திண்டு Glare Filter - கூசொளி வடிகட்டி

  • இருக்கின்ற சொற்களிலேயே தேடிக் கொண்டிராமல் பொருத்தமான வேர்ச் சொற்களைத் தேர்வு செய்து விகுதி சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்கியுள்ளார்.

Quantum - துளியம் Terminal - முனையம் Bit - துண்மி Robot - எந்திரன்

  • சில ஆங்கிலச் சொற்களுக்கு ஒற்றைத் தமிழ்ச்சொல்லாய் மொழிபெயர்க்காமல், இருவேறு சொற்களை இணைத்து காரணப் பெயராய் ஒரு புதிய சொல்லைப்

படைக்கிறார்.

Antenna - அலைவாங்கி Virus - நச்சு நிரல் Audio - கேட்பொலி

  • ஆங்கிலச் சொற்களை அப்படியே நேரடியாக மொழி பெயர்ப்பது வேடிக்கையாக அமைந்துவிடும். மலையிலிருந்து கொட்டும் நீரை ஆங்கிலத்தில் 'Water Falls' என்று கூறினர். தமிழில் 'நீர்விழ்ச்சி' என மொழிபெயர்த்தனர். 'அருவி' என்ற

அழகான தமிழ்ச் சொல் இருப்பது அவர்களுக்குத் தெரியாது போலும். இப்படிப்பட்டவர்கள் Ladies Finger-ஐ 'பெண்களின் விரல்' என்றுதான் மொழி பெயர்ப்பார்கள். திரு மணவை யாரைப் பொறுத்தவரை ஆங்கிலச் சொல் என்ன காரணத்திற்காக அமைந்திருந்த போதிலும், இடம் பொருள் ஏவல் அறிந்து, காரண காரிய முறையில் மொழியாக்கம் (மொழிபெயர்ப்பு அல்ல) செய்திருப்பது பாராட்டுதற்குரியது.

Handset - ஒலியுறுப்பு Cold Fault - உடன்தெரியும் பிழை Greet - விளங்கா மொழி Female connector - துளை இணைப்பி Gun - வீச்சுப் பொறி

35