பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lock cod

லிருந்து வட்டினை அல்லது நாடாக் கோப்பைப் பாதுகாத்தல்.

lock code : பூட்டுக்குறியீடு : பயன் படுத்துவோரின் ஆணைத் தொகுப்பை அங்கீகாரமற்ற வகை யில் காலப்பகிர்வு முறையில் பயன் படுத்தும் பிறரால் சிதைக்கப் படா மல் காக்க வழங்கப்படும் வரிசைப் படியான எழுத்துகள் மற்றும் எண் கள். பயனாளர் சரியான பூட்டுக் குறி யீட்டைப் பயன்படுத்தாவிட்டால் பயனாளர் ஆணைத் தொகுப்பில் மாற்றங்களைச் செய்ய கணினி மறுக்கும். locked up keyboard : L9-Lüull-Lவிசைப்பலகை : விசைகளின் இயக் கத்துக்கு கணினி இயங்க மறுக்கும் நிலைமை. locking a disk : Gull&DLü obt-Léo : வட்டு ஒன்றின் உரிமை பாதுகாக்கப் பட்டதாக இருந்தால் அந்த வட்டு பூட்டப்பட்ட தாகும். கணினியின் பிற தகவல்களினால் வட்டின் உள்ளடக்கங்கள் திருத்தப்படாமல் பாதுகாப்பதை இந்நடவடிக்கை உறுதி செய்கிறது. lockout : வெளித்தாழ்; அடைப்பு : 1. இடையீட்டை ஒடுக்குதல். 2. பல்முனை வகைப்படுத்து சூழலில் முக்கிய தகவல்களை ஒரே நேரத்தில் வகைப்படுத்தும் அலகுகள் பெற வகை செய்யும் ஆணைத் தொகுப்பு உத்தி. lockup : பூட்டப்பட்ட முடக்கம் : மேலும் எந்தச் செயலும் நடைபெற முடியாத சூழ்நிலை. log : பதிவு; பதிவு செய்தல் : ஒவ் வொரு வேலை அல்லது ஒட்டம், அதற்குத் தேவைப்படும் நேரம், இயக்குபவர் செயல்கள் மற்றும்

412

logging

தொடர்பான தகவல்களைப் பட்டிய லிடும் தகவல் செயலாக்கக் கருவி யின் இயக்கங்களின் பதிவேடு.

log of: முடிப்பு:முடித்தல். log on :ஆரம்பம்; தொடங்குதல்.

log out:முடிவுறுதல். log-in name: Gignu siis, Gluuii.

logarithm:லோகரிதம்; மடக்கை: ஒரு குறிப்பிட்ட எண்ணை உருவாக்க ஒரு நிலையெண்ணை எத்தனை மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதைத் குறிப்பிடுவர். அது பொதுவாக 10 அல்லது 0 ஆக இருக்கும். சான்றாக 2இன்.3 மடங்கு 8-க்குச்சமம் என்றால் 2இன் ஆதார எண்ணாகக் கொண்டு 8-ஐக் கொண்டுவர 3 லாகரிதம் ஆகும். இதன் பொருள் 2-ஐ அதன் மூன்றதாவது மதிப்புக்கு உயர்த் தினால் 8 வரும் என்பதாம். logarithm tables அட்டவணை.

log book , பதிவுப் புத்தகம் : கணினி தொழிலுக்குக் கடன் வாங்கப்பட்ட கடல்துறை குழுஉக் குறி. வேலை யில் இருக்கும் கணினி பணியாளர் களைப் பற்றியும் அவர்கள் செய்து முடித்த பணிகளைப் பற்றியும் பதிவேடு வைத்துக்கொள்ள இது உதவுகிறது. வன்பொருள் பராமரிப்பு நேர ஒதுக்கீடுகள் மற்றும் பழுதான வைகளைப் பற்றிய பதிவேடு வைத் திருக்கவும் இது உதவுகிறது. logging-in: உள் நுழைத்தல்; தொடங் கல்; கணிப்பொறியினுட்புகும் செயற் பாடு : உரையாடல் முறையில் ஒப்ப மிட்டு கணினியைப் பயன்படுத்தும் உரிமை பெற்றவரைச் சோதித்துக் கணினியுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் செயல் முறை.

மடக்கை