பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

AAAI 43 absolute

AAAI : ஏஏஏஐ : அமெரிக்க செயற்கை நுண்ணறிவுச் சங்கம் என்பதைக் குறிக்கும் American Association for Ar tificial intelligence என்ப தன் குறும் பெயர். செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான தொழில்துறை அமைப்பு.

abacus : மணிச் சட்டம் : மணிகள் வரிசையாகக் கோக்கப்பட்ட கம்பி கள் பொருத்தப்பட்ட, எளிய கணக்கு களைச் செய்யப் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவி. இப்போ தும் பல கீழ்த்திசை நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

abbreviated address : சுருங்கிய முகவரி முறை : முழு முகவரியைப் பயன்படுத்தும் முறையிலிருந்து மாறுபட்டது. இதில் முகவரியின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு குறுக்கப்பட்ட குறியீடு காரணமாக விரைவாக தகவல்களைக் கையாள இயலுகிறது.

ABC : ஏபிசி : 'Atanasoff-Berry Computer' எனப்படும் முதல் இலக்க வியல் கணினியின் குறும் பெயர். இதனை 1939இல் ஜான் அடன சோஃபும் அவரது உதவியாளர் கிளிப் போர்டு பெர்ரியும் உருவாக்கினர்.

abend : இயல்பற்ற முடிவு: இயல்புக்கு மாறான, முடித்தலுக்கு உரிய குறும் பெயர். பூஜ்யத்தினால் வகுத் தல் அல்லது ஓர் எண்ணோடு ஓர் எழுத் தைக் கூட்ட முயற்சித்தல் காரணமாக ஏற்படும் பிழையால், கட்டளைத் தொகுப்பு ஒன்றின் செயற்பாட்டை முன்கூட்டியே முடித்தல்.

abnormal terminations : இயல்பற்ற நிறுத்தம் : பூஜ்யத்தால் வகுத்தல், எண் அளவு மீறல் போன்ற பிழையின் விளைவாக ஒரு ஆணைத் தொடர் நிறுத்தப்படுதல்.

abort : கைவிடல் : முறித்தல் : ஒரு முறை பிறழ்ந்த செயல், அல்லது தவறு நிகழும்பொழுது, ஒரு கட்டளைத் தொகுப்பை முடிவுக்குக் கொண்டு வரும் முறை.

abscissa : இடையச்சுத் தூரம் : ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள தூரம். ஒரு வரைபடம் புள்ளிவிவர அட்டவணையின் எக்ஸ் (x) அச்சு (y) அச்சுக்கோட்டுக்கு மாறுபட்ட தாகும்.

absolute address : நேரடி முகவரி; தனி முகவரி; சரியான முகவரி; துல்லிய முகவரி; நிரந்தர முகவரி : நினைவுப் பகுதியின் ஒரு குறிப்பிட்ட இடத் திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி . 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத் தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர முகவரி என்றும் அழைக்கப்படும்.

absolute coding : நேரடிக் குறியீட்டு முறை; தனிக் குறிமுறை : எந்திரக் கட்டளைகளையும் நிரந்தர முகவரி களையும் பயன்படுத்தும் குறியீட்டு முறை. வேற்று வடிவத்துக்கு மாற்றா மல் நேரடியாக கணினியால் செயல் படுத்தப்படும். இம்முறை அடை யாளக் குறியீட்டு முறையிலிருந்து மாறுபட்டது.

absolute coordinates : நேர் ஒருங்கி ணைப்புகள் : ஒரு மைய அச்சின் தொடர்பாகக் குறியிடப்படும் ஒருங் கிணைப்புகள், சார்பு ஒருங்கிணைப்பு முறையின்படி முந்தைய ஒருங் கிணைப்புகளை ஒட்டி வருவதற்கு மாறானது.

absolute disk sectors : நேர் வட்டுப் பகுதி : ஒரு குறிப்பிட்ட எண்ணிடத் தில் உள்ள வட்டுப் பகுதி.